பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வ அமைப்புகள் சார்பில் 'காந்தியை பேசுவோம்' விழா

Added : அக் 03, 2021
Share
Advertisement
சென்னை, :மஹாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு, தன்னார்வ அமைப்புகள் இணைந்து, 'காந்தியை பேசுவோம்' எனும் தலைப்பில் மூன்று நாள் விழா மற்றும் கைத்தறி ஆடைகள் கண்காட்சியை நேற்று துவங்கின.மஹாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய கைவினை கூட்டமைப்பு, துலா, மிஷன் சம்ருதி ஆகிய அமைப்புகள் இணைந்து காந்தியை பேசுவோம் எனும் தலைப்பில், நேற்று துவங்கி நாளை

சென்னை, :மஹாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு, தன்னார்வ அமைப்புகள் இணைந்து, 'காந்தியை பேசுவோம்' எனும் தலைப்பில் மூன்று நாள் விழா மற்றும் கைத்தறி ஆடைகள் கண்காட்சியை நேற்று துவங்கின.மஹாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய கைவினை கூட்டமைப்பு, துலா, மிஷன் சம்ருதி ஆகிய அமைப்புகள் இணைந்து காந்தியை பேசுவோம் எனும் தலைப்பில், நேற்று துவங்கி நாளை வரை மூன்று நாள் விழா மற்றும் கண்காட்சியை நடத்துகின்றன.நிகழ்வின் துவக்க நிகழ்ச்சி, எழும்பூர், காசா மேஜர் சாலையில் உள்ள 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்' கல்லுாரி வளாகத்தில் நேற்று காலை நடந்தது.விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்' கல்லுாரி தலைவருமான மேத்யூ, சி.எம்.டி., இன்டெலெக்ட் டிசைன் மற்றும் போலாரிஸ் அறக்கட்டளை நிறுவனர் அருண் ஜெயின், பேராசிரியர் ஷிவ் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.மூன்று நாட்கள் நடக்கும் இந்நிகழ்வில், காந்திய சிந்தனைகள், தத்துவம், பொருளாதாரம் மற்றும் அவரின் சித்தாந்தங்கள் குறித்து பேசப்பட உள்ளன. காந்திய வழியில் பயணிக்கும் நிபுணர்களின் சொற்பொழிவு, நடனம், நுாற்பு பட்டறை, குழு விவாதங்கள் நடக்கின்றன.விழாவில், சிறப்பு பேச்சாளர்களாக, குத்தம்பாக்கம் இளங்கோ, ராமசுப்பிரமணியன், கண்ணன், சித்ரா பாலசுப்பிரமணியன், தேவிகா, ஆசிபா லோகநாதன், பாலாஜி சங்கர், பட்டாபிராமன், அனந்து, சுமன கவுலி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.மேலும், பெண்கள், சிறார் மற்றும் ஆடவர்களுக்கான கைத்தறி ஆடைகள், கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடக்கிறது.கண்காட்சியில், 'போர்கை, நேச்சர் ஆலி, துலா, மகன் காதி, கிராம் சேவா மண்டல், வீவர் பார்டு, காந்திகிராம், கேஸ்கோம், புளுலோட்டஸ் ஆகிய அமைப்புகள், தங்கள் 'ஸ்டால்'களை அமைத்துள்ளனர்.மூன்று நாள் நிகழ்ச்சியில், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களில் தயாரிக்கப்பட்ட சுவையான, சுகாதாரமான உணவுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.மேலும் தகவல்களுக்கு, 73388 83071, 73388 83074, 97172 62377 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X