சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.50 லட்சம் மதிப்பு தங்க, வைர நகைகள் சென்னை தொழிலதிபர் வீட்டில் கொள்ளை

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருமங்கலம் :டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, அண்ணா நகர் மேற்கு, 18வது பிரதான சாலை, வள்ளலார் குடியிருப்பைச் சேர்ந்தவர் இளங்கோவன், 54; டிராவல்ஸ் உரிமையாளர். இவர், இரண்டடுக்கு கொண்ட வீட்டில், குடும்பத்தினருடன் வசித்து

திருமங்கலம் :டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, அண்ணா நகர் மேற்கு, 18வது பிரதான சாலை, வள்ளலார் குடியிருப்பைச் சேர்ந்தவர் இளங்கோவன், 54; டிராவல்ஸ் உரிமையாளர். இவர், இரண்டடுக்கு கொண்ட வீட்டில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் உள்ள அறையில், குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு துாங்கியுள்ளார். நேற்று காலை 6:00 மணியளவில், அறையின் கதவை திறக்க முயன்ற போது, கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, வீட்டிற்கு வழக்கமாக பால் போடும் நபரின் உதவியுடன், கதவை திறந்துள்ளார்.அப்போது, தரை தளத்தில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 100 சவரன் தங்க நகை 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள், வெள்ளி உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயிருந்தன. இதுகுறித்து, திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு நடத்தினர். இளங்கோவின் வீடு மற்றும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி கேமரா'க்கள் பழுதடைந்துள்ளன. இதனால், கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில், கொள்ளை நடந்த பகுதியை இணைக்கும் மற்ற சாலைகளில் உள்ள கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X