சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது லாரி மோதல் வாலிபர் உயிரிழப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
மீனம்பாக்கம் :ஜி.எஸ்.டி., சாலையில், இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில், வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட், இவரது மகன் நைஜல், 24. இவர் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், அந்த வேலையை விட்டு, வேறு வேலை தேடி

மீனம்பாக்கம் :ஜி.எஸ்.டி., சாலையில், இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில், வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட், இவரது மகன் நைஜல், 24. இவர் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், அந்த வேலையை விட்டு, வேறு வேலை தேடி வந்தார்.இந்நிலையில், நேற்று ஆலந்துாரில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, மீனம்பாக்கம், பழைய விமான நிலையம் அருகே பின்புறம் வந்த டிப்பர் லாரி ஒன்று, நைஜலின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த அவரின் தலையில், லாரி டயர் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நைஜல் பலியானார்.இது குறித்து விசாரித்த மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய திரிசூலத்தைச் சேர்ந்த அஜித்குமார், 21, என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X