மாயமானவர் உடல் கூவம் ஆற்றில் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமானவர் உடல் கூவம் ஆற்றில் மீட்பு

Added : அக் 03, 2021
Share
சிந்தாதிரிப்பேட்டை, :இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போனவர் உடல், கூவம் ஆற்றில் மீட்கப்பட்டது.சிந்தாதிரிப்பேட்டை, படவட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் 29. இவர், சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் காலை முதல் பிரேம்குமாரை காணவில்லை. இது குறித்து, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார்

சிந்தாதிரிப்பேட்டை, :இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போனவர் உடல், கூவம் ஆற்றில் மீட்கப்பட்டது.சிந்தாதிரிப்பேட்டை, படவட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் 29. இவர், சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் காலை முதல் பிரேம்குமாரை காணவில்லை. இது குறித்து, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில், படவட்டம்மன் கோவில் தெருவுக்கு அருகில், அம்மா நகர் மேம்பாலத்துக்கு கீழ் கூவம் ஆற்றில் நேற்று இறந்த நிலையில், பிரேம்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேம்குமார் குடி போதையில் மேம்பாலத்தில் படுத்து துாங்கிய போது, தவறி கூவம் ஆற்றில் விழுந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X