வள்ளலார் ஹெர்பல்ஸ் மூலிகை மிக்ஸ் அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வள்ளலார் ஹெர்பல்ஸ்' மூலிகை மிக்ஸ் அறிமுகம்

Added : அக் 03, 2021
Share
சென்னை, :வைரஸ்களுக்கு எதிராக, 99.5 சதவீதம் எதிர்ப்பு சக்தி கொண்ட, மத்திய அரசின் சான்று பெற்ற 'வள்ளலார் ஹெர்பல்ஸ்' மூலிகை மிக்ஸ், சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.சார்ஸ், கொரோனா வைரஸ்களுக்கு எதிராக, 99.5 சதவீதம் எதிர்ப்பு ஆற்றல் கொண்ட வள்ளலார் ஹெர்பல்ஸ் மூலிகை மிக்ஸ் பவுடரை, 'லினன் எக்ஸ்போர்ட்' நிறுவனர் நவநீத் துரைராஜ் சென்னையில் நேற்று

சென்னை, :வைரஸ்களுக்கு எதிராக, 99.5 சதவீதம் எதிர்ப்பு சக்தி கொண்ட, மத்திய அரசின் சான்று பெற்ற 'வள்ளலார் ஹெர்பல்ஸ்' மூலிகை மிக்ஸ், சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.சார்ஸ், கொரோனா வைரஸ்களுக்கு எதிராக, 99.5 சதவீதம் எதிர்ப்பு ஆற்றல் கொண்ட வள்ளலார் ஹெர்பல்ஸ் மூலிகை மிக்ஸ் பவுடரை, 'லினன் எக்ஸ்போர்ட்' நிறுவனர் நவநீத் துரைராஜ் சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தினார்.இதன் துவக்க விழாவில், அடையாறு ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் சீனிவாசராவ், நேச்சுரல்ஸ் இணை நிறுவனர் குமரவேல், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், 'நமது நம்பிக்கை' ஆசிரியர் கவிஞர் முத்தையா உள்ளிட்டோர் மூலிகை மிக்ஸ் பவுடரை அறிமுகப்படுத்தினர்.நவநீத் துரைராஜ் அளித்த பேட்டி:கொரோனா வைரசுக்கு எதிராக, 99.5 சதவீத எதிர்ப்பு ஆற்றல் சக்தி கொண்ட, உலகின் முதல் ஹெர்பல்ஸ் மிக்ஸ் இது. இதை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வகம் பரிசோதித்து, தரச்சான்றிதழ்கொடுத்துள்ளது. கொரோனாவுக்கு பின், ஒன்றரை ஆண்டுகளாக தீவிரமாக ஆராய்ச்சி செய்து, தகுந்த மருத்துவர்களிடம் ஆலோசித்து இதை உருவாக்கியுள்ளேன்.துாதுவளை, கரிசலாங் கண்ணி உள்ளிட்ட முற்றிலும் இயற்கையான பொருட்களை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. தேநீர் குடிப்பது போல பருகலாம். சுவைக்கு தேன், எலுமிச்சை சேர்க்கலாம். இதில், ஸிங்க், காப்பர், கால்சியம், அயன், பொட்டாசியம், வைட்டமின் சி உள்ளிட்ட நுாண்ணுட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.மூலிகை பானமாக அல்லாமல், ஆவி பிடிக்கவும், அஜீரண கோளாறுகளை அகற்றும் தன்மையும் இது கொண்டுள்ளது. பக்க விளைவுகள் எதுவும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
ஞானசம்பந்தன் பேசியதாவது:தகுந்த சான்றிதழுடன் இந்த மூலிகை அறிமுகமாகியுள்ளது. நம் நாட்டில் தான் உணவே மருந்தாக உள்ளது. மேல் நாட்டில் அப்படியில்லை. 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பர். யவனர்கள் தேடி வந்து மிளகை வாங்கி சென்றனர். அதனால், மிளகை யவனப்ரியா என்றும், கருப்புத்தங்கம் என்றும் அழைப்பதுஉண்டு.இந்த மண்ணில் மட்டுமே மிளகு விளையும். இங்குள்ள இயற்கையான பொருட்களை வைத்து இதை உருவாக்கியுள்ளார். கொரோனாவுக்கு மாற்று மருந்தாக, சஞ்சீவி மூலிகையே கிடைத்தது போல் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X