சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

Added : அக் 03, 2021
Share
Advertisement
தாராபுரம்:தாராபுரம், அமராவதி ஆற்றில் மூழ்கி, கல்லுாரி மாணவன் பலியானார்.திருப்பூர், வாசுகி நகரை சேர்ந்தவர் ஆதித்யாராம், 16, கோவை அருகே தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் முதலாமாண்டு படித்தார். நண்பர்கள் மூவருடன், தாராபுரத்துக்கு நேற்று மதியம் வந்தார். நான்கு பேரும் அமராவதி ஆறு புதிய பாலம் பகுதிக்குச் சென்று, அமராவதி ஆற்றில் குளித்தனர். நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான

தாராபுரம்:தாராபுரம், அமராவதி ஆற்றில் மூழ்கி, கல்லுாரி மாணவன் பலியானார்.திருப்பூர், வாசுகி நகரை சேர்ந்தவர் ஆதித்யாராம், 16, கோவை அருகே தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் முதலாமாண்டு படித்தார்.

நண்பர்கள் மூவருடன், தாராபுரத்துக்கு நேற்று மதியம் வந்தார். நான்கு பேரும் அமராவதி ஆறு புதிய பாலம் பகுதிக்குச் சென்று, அமராவதி ஆற்றில் குளித்தனர். நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான பகுதிக்குச் சென்ற ஆதித்யாராம் தண்ணீரில் தத்தளித்தார். அப்பகுதியில் குளித்தவர்கள் உதவியுடன் நண்பர்கள் அவரை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X