சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : அக் 03, 2021
Share
Advertisement
கொடுங்கையூரில் ரவுடிகள் சுற்றிவளைப்புகொடுங்கையூர்: கொடுங்கையூர், எழில் நகர் 9வது தெரு, பி - பிளாக்கைச் சேர்ந்தவர் மணிகண்டன், 18. முன்விரோதம் காரணமாக, மணிகண்டனை அரிவாளால் வெட்டிய வழக்கில், கொடுங்கையூர்போலீசார், தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 4வது தெருவைச் சேர்ந்த சதாம் உசேன், 21, ராஜாஜி நகரைச் சேர்ந்த ஆசிப், 21, ஆகியோரை கைது செய்து, மூன்று கத்திகளை பறிமுதல் செய்தனர்.l அதேபோல்,

கொடுங்கையூரில் ரவுடிகள் சுற்றிவளைப்புகொடுங்கையூர்: கொடுங்கையூர், எழில் நகர் 9வது தெரு, பி - பிளாக்கைச் சேர்ந்தவர் மணிகண்டன், 18. முன்விரோதம் காரணமாக, மணிகண்டனை அரிவாளால் வெட்டிய வழக்கில், கொடுங்கையூர்போலீசார், தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 4வது தெருவைச் சேர்ந்த சதாம் உசேன், 21, ராஜாஜி நகரைச் சேர்ந்த ஆசிப், 21, ஆகியோரை கைது செய்து, மூன்று கத்திகளை பறிமுதல் செய்தனர்.

l அதேபோல், கொடுங்கையூர் தனிப்படை போலீசார், இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சுற்றித்திரிந்த தண்டையார்பேட்டை, முத்தமிழ் நகரைச் சேர்ந்த முத்துக்குமார், 30, திருவள்ளுவர் நகர், குறுக்கு தெருவைச் சேர்ந்த கீர்த்தி, 24, ஆகியோரை கைது செய்து, இரண்டு கத்திகளை பறிமுதல் செய்தனர்.தம்பதியை தாக்கி போன் பறித்தோர் சிக்கினர்கோயம்பேடு: முகப்பேரைச் சேர்ந்தவர் நந்தகோபால், 63. இவரது மனைவி தனலட்சுமி, 56. தம்பதி, சமீபத்தில் இரு சக்கர வாகனத்தில், கோயம்பேடு மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவர்களை தாக்கி மொபைல் போனை பறித்து சென்றனர்.

கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இதில், மதுரவாயலைச் சேர்ந்த கமலேஷ், 20, நெற்குன்றத்தைச் சேர்ந்த தீனா, 20, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, நான்கு இருசக்கர வாகனங்கள், இரண்டு மொபைல் போன் மற்றும் பட்டா கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்புதிருமுல்லைவாயில்: அம்பத்துாரை அடுத்த அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சகிலா, 32. இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று கடையில் வந்த மர்ம நபர், சிகரெட் வேண்டும் என கேட்டுள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில், சகிலா கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்து, இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் தப்பினார். திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.டூ - வீலர் திருடியவர் பிடிபட்டார்திருமுல்லைவாயில்: அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அய்யப்பன், 33. இவரது இரு சக்கர வாகனம் செப்., 19ம் தேதி மாயமானது. திருமுல்லைவாயில் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், அயப்பாக்கம், வாட்டர் டேங்க் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேக நபர்கள் இருவர் சிக்கினர்.

விசாரணையில், திருவேற்காடைச் சேர்ந்த மணிகண்டன், 20, என்பதும், அய்யப்பனின் இரு சக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பஸ் மோதி ஒருவர் உயிரிழப்புஅண்ணா நகர்: அமைந்தகரை அருகில், அரசு பஸ் மோதிய விபத்தில், அடையாளம் தெரியாத நபர் பலியானார்.

அண்ணா சதுக்கம் - கோயம்பேடு செல்லும், 'தடம் எண்: 27பி' பஸ், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, கோயம்பேடை நோக்கி சென்றது. அமைந்தகரை அருகே சென்றபோது, சாலையை கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது பஸ் மோதியது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். சம்பவம் தொடர்பாக, திருவள்ளூரைச் சேர்ந்த பஸ் ஓட்டுனர் செல்வம், 47, என்பவர் மீது, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.விஷ வாயு கசிவால் காசிமேடில் பரபரப்புகாசிமேடு: காசிமேடை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு சொந்தமான ஐஸ் தொழிற்சாலை, காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள 'அம்மோனியா' சிலிண்டரில் நேற்று திடீர் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறலும், கண்ணெரிச்சலும் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்து ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த வீரர்கள் விரைந்து வந்து, அம்மோனியா கசிவை சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பெண் குளிப்பதை படம்பிடித்தவர் கைதுசெங்குன்றம்: செங்குன்றம், கிராண்ட் லைன், தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் விஜய், 23. இவர், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில், பெண் ஒருவர் குளிப்பதை, தன் மொபைல் போனில் 'வீடியோ' எடுத்துள்ளார்.

இதை பார்த்த அந்த பெண் கத்தியதால், விஜய் அங்கிருந்து தப்பினார். இது குறித்து விசாரித்த செங்குன்றம் போலீசார், நேற்று விஜயை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X