உயிரிழந்த குட்டி அருகே தாய் யானை பாச போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உயிரிழந்த குட்டி அருகே தாய் யானை பாச போராட்டம்

Added : அக் 03, 2021
Share
பந்தலுார்:பந்தலுார் அருகே உயிரிழந்த குட்டியின் அருகில், தாய் யானை மற்றும் இரண்டு யானைகள் பாசப் போராட்டம் நடத்தி வருகின்றன.நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி மலைப்பகுதியில் எட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு தேயிலை தோட்டம் வழியாக நடந்து சென்றுள்ளன. அதில் ஒரு குட்டி யானை நடக்க முடியாத நிலையில் தாய் யானை இழுத்து
 உயிரிழந்த குட்டி அருகே  தாய் யானை பாச போராட்டம்

பந்தலுார்:பந்தலுார் அருகே உயிரிழந்த குட்டியின் அருகில், தாய் யானை மற்றும் இரண்டு யானைகள் பாசப் போராட்டம் நடத்தி வருகின்றன.

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி மலைப்பகுதியில் எட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு தேயிலை தோட்டம் வழியாக நடந்து சென்றுள்ளன. அதில் ஒரு குட்டி யானை நடக்க முடியாத நிலையில் தாய் யானை இழுத்து சென்றுள்ளது. நேற்று தேயிலை தோட்டத்தில் குட்டி யானை இறந்து கிடந்தது. மூன்று யானைகள் சுற்றி நின்றிருந்தன.

தகவலல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் ஆனந்த குமார் தலைமையிலான வனத் துறையினர், சப்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானைகள் நகரவில்லை. ஒவ்வொரு யானையாக குட்டியின் அருகே வந்து, அருகில் இருந்த தண்ணீரை எடுத்து தெளித்து, கண்ணீர் விட்ட காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.

வனத் துறையினர் கூறுகையில், 'யானைகள், குட்டி இறந்த சோகத்தில் இருப்பதால் அங்கிருந்து எப்போது செல்லும் என்பதைக் கூற இயலாது. 'யானைகள் சென்ற பின் தான், குட்டியை பிரேத பரிசோதனை செய்ய முடியும். இப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X