சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதம் குறித்து அவதுாறு பரப்பியவருக்கு 'குண்டாஸ்'

Added : அக் 03, 2021
Share
Advertisement
சென்னை : முஸ்லிம் மதம் குறித்து அவதுாறு பரப்பியவரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.சென்னை, புத்தகரத்தில் 'யோகக்குடில்' என்ற பெயரில், சிவகுமார் என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். அவருடைய, 'யுடியூப்' சேனலில் முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசினார். ஏற்கனவே, ஹிந்து மதம் குறித்து, அவதுாறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீஸ் கமிஷனர்

சென்னை : முஸ்லிம் மதம் குறித்து அவதுாறு பரப்பியவரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.சென்னை, புத்தகரத்தில் 'யோகக்குடில்' என்ற பெயரில், சிவகுமார் என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். அவருடைய, 'யுடியூப்' சேனலில் முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசினார். ஏற்கனவே, ஹிந்து மதம் குறித்து, அவதுாறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.அதேபோல், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்த படப்பையை சேர்ந்த சாமுவேல், 35, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த, ராயப்பேட்டையை சேர்ந்த பாலாஜி, 29, பெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜாஜி, 26, திருநீர்மலையைச் சேர்ந்த நந்தகுமார், 28, ஆகியோரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.இந்தாண்டில் இதுவரை, 176 கொலை குற்றவாளிகள் உட்பட 288 பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X