பொது செய்தி

இந்தியா

பவானிப்பூர் இடைத்தேர்தல்: மம்தா முன்னிலை

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோல்கட்டா: பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் முதல்வர் மம்தா முன்னிலை வகித்து வருகிறார்.மேற்கு வங்க சட்டசபைக்கு ஏப்ரலில் தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், 213 தொகுதிகளை கைப்பற்றி திரிணமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட
பவானிப்பூர் இடைத்தேர்தல்: மம்தா முன்னிலை

கோல்கட்டா: பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் முதல்வர் மம்தா முன்னிலை வகித்து வருகிறார்.

மேற்கு வங்க சட்டசபைக்கு ஏப்ரலில் தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், 213 தொகுதிகளை கைப்பற்றி திரிணமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.


latest tamil news


ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். எனினும் முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். ஆறு மாதத்துக்குள் மேற்கு வங்கத்தில் உள்ள ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே, அவர் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்ற சட்ட சிக்கல்ஏற்பட்டது.
இதையடுத்து, மம்தா போட்டியிட வசதியாக பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த மாநில வேளாண் அமைச்சர் சோபன்தேவ், தன் பதவியை ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தில் பவானிபூர் உட்பட காலியாக இருந்த மூன்று தொகுதிகளுக்கு, செப்., 30ல் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பவானிபூர் தொகுதியில் திரிணமுல் காங்., சார்பில் மம்தா பானர்ஜி, பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை.திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., சார்பில் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரசாரத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.பலத்த பாதுகாப்புடன் பவானிபூர் தொகுதியில் கடந்த 30ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 53 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் மட்டுமே பதிவாகின. ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதல் மம்தா முன்னிலை வகித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
03-அக்-202114:14:49 IST Report Abuse
Suppan தோற்றுவிட்டால் இருக்கவே இருக்குறது பங்களாதேஷி படை. முன்பு செய்தது மாதிரி கட்டவிழ்த்து விட வேண்டியதுதான்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
03-அக்-202113:59:09 IST Report Abuse
மலரின் மகள் காங்கிரஸ் தனது நம்பிக்கையை இழப்பது நாட்டிற்கு நல்லதல்ல. தலைமையில் மாற்றமும் படிப்படியாக அங்கிருந்து அடிப்படைவரை மேம்பாடும் தேவை இத்தருணம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-அக்-202113:56:06 IST Report Abuse
Bhaskaran ஆந்திராவில் ஒரு இடை தேர்தலில் அம்மாநில முதல்வர் அஞ்சையா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார அதை மாதிரி செஞ்சாள் செலவாவது மிச்சம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X