அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலி நகை அடகு வைத்து ரூ.1.64 கோடி... மோசடி!வங்கி செயலர் உட்பட மூவர் 'சஸ்பெண்ட்'

Added : அக் 03, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில், போலி நகைகளை அடமானம் வைத்து, 1.64 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வங்கி செயலர், மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் என, மூன்று பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்த பொதுமக்களின் நகைகளில், 5 சவரன் வரையிலான நகைக் கடன்களை, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும்

உத்திரமேரூர் தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில், போலி நகைகளை அடமானம் வைத்து, 1.64 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வங்கி செயலர், மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் என, மூன்று பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்த பொதுமக்களின் நகைகளில், 5 சவரன் வரையிலான நகைக் கடன்களை, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்யப்படும் என, தி.மு.க., சார்பில் வாக்குறுதி அறிவிக்கப்பட்டு இருந்தது.'பலே' திட்டம்இதனால், தேர்தலுக்கு முன்கூட்டியே கூட்டுறவு வங்கிகளில், பல கணக்குகளில் தங்களின் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற, 'பலே' திட்டம் வகுத்துள்ளனர்.

இன்னும் சிலர், போலியான நகைகளை, வங்கி அதிகாரிகளின் துணையோடு அடமானம் வைத்துள்ளனர்.தள்ளுபடி அறிவிப்பு காரணத்தால், கடனாக பெற்ற பணம் லாபம் என கணக்கிட்டு, இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வேலையில், கூட்டுறவுதுறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களது ஆய்வில், ஒரே நபர் பல வங்கிகளில் அடமானம் வைத்தது, போலியான நகை

ளை அடமானம் வைத்தது போன்ற விபரங்களை கண்டறிந்துள்ளனர்.தமிழகம் முழுதும் பல வங்கிகளில், கோடிக்கணக்கான ரூபாய் இதுபோல் முறைகேடாக பெறப்பட்டுள்ளது.அதில் ஒன்றாக, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொடக்க கூட்டுறவுவேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில், போலி நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்ற மெகா மோசடி அம்பலமாகியுள்ளது.

உத்திரமேரூர் ராயர்

தெருவில், உத்திரமேரூர் தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி செயல்படுகிறது. சேமிப்பு, நடப்பு, நகைக் கடன் என, 2,000க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கு துவக்கியுள்ளனர்.மோசடிஇவ்வங்கியில் தங்க நகைகளின் பேரில் அடமான கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், போலி நகைகளை வைத்து, லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதாக கூட்டுறவு துறைக்கு புகார் சென்றது.இதையடுத்து, கூட்டுறவுசங்கத்தின் தணிக்கை துறை அதிகாரிகள், வங்கியில் அடமானம் வைத்துள்ள

தங்க நகைகளை ஆய்வு செய்து, தணிக்கை செய்தனர். இதில், போலி நகைகளை அடமானம் வைத்து, 1.64 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.இதையடுத்து, கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், வங்கியின் செயலர் கலைச்செல்வி, மேற்பார்வையாளர் ஜெயஸ்ரீ, நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து, போலி நகைகளை அடமானம் வைத்து, மோசடி செய்தது அம்பலமாகியது.இதையடுத்து இம்மூவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து, மாவட்ட பதிவாளர் சுவாதி உத்தரவிட்டுள்ளார்.போலி நகைகளுக்கு வழங்கப்பட்ட 1.64 கோடி ரூபாய்க்கு, நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார் மற்றும் வங்கியில் 38 நகைக் கடன் பெற்ற, 25 பேரும் பொறுப்பாக்கப்பட்டு உள்ளனர்.சங்க பணியாளர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, துறை ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், நிதியிழப்பு தொகையை வசூலிக்க, வங்கி பணியாளர்களின் சொத்துக்களை 'ஜப்தி' செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மூன்று மாதங்கள்முதற்கட்டமாக வங்கியின் செயலர் கலைச்செல்வி, மேற்பார்வையாளர் ஜெயஸ்ரீ மற்றும் நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு சட்ட விதிகளின்படி, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை முடிய மூன்று மாதங்களாகும்; அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரிய வரும்.சுவாதிகூட்டுறவு துறை, காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X