பொது செய்தி

தமிழ்நாடு

1,403 தற்காலிக முகாம், 107 நிரந்தர முகாம்: பருவமழை நடவடிக்கைக்கு அதிகாரி உத்தரவு

Added : அக் 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அதிகாரியான சுப்ரமணியன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்தார். 1,403 தற்காலிக முகாம், 107 நிரந்தர முகாம் அமைக்க உத்தரவிட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம்,படப்பை அருகே ஆதனுாரில் துவங்கும் அடையாறு கால்வாயில், ஆண்டுதோறும் பருவமழை காலத்தில்

காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அதிகாரியான சுப்ரமணியன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

1,403 தற்காலிக முகாம், 107 நிரந்தர முகாம் அமைக்க உத்தரவிட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம்,படப்பை அருகே ஆதனுாரில் துவங்கும் அடையாறு கால்வாயில், ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

இதனால் அடையாறு கரையோரத்தில் வசிக்கும் வரதராஜபுரம், ராயப்பா நகர், அஷ்டலஷ்மி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள், நீரில் மூழ்குகின்றன.இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை துவங்கும் முன், அடையாறு கால்வாய் துவங்கும்இடமான ஆதனுார் 'ஜீரோ பாயின்ட்' முதல் வரதராஜபுரம் வரை கால்வாய் சீரமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரமணியன்,மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, கலெக்டர்வளாக கூட்டரங்கில் கலெக்டர், பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில், கண்காணிப்பு அலுவலர் சுப்ரமணியன் கூறியதாவது:பெரிய, சிறிய ஏரிகளின் கரைகள் பாதுகாப்பாக உள்ளதா என கண்காணியுங்கள். ஜெனரேட்டர்கள், பொக்லைன், சவுக்கு கட்டைகள், மணல் மூட்டைகள்ஆகியவை போதிய அளவு உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
மாவட்டத்தில் 1,403 தற்காலிக முகாம்களும், 107 நிரந்தர முகாம்களும், கால்நடைகளுக்கு 45 முகாம்களும் அமைக்கப்படுகின்றன.மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் ஜெனரேட்டர்கள் தாழ்வான பகுதியில் இருந்தால், அவற்றை உயரமான பகுதியில் வைக்க, முன்கூட்டியே நடவடிக்கை எடுங்கள்.

மருத்துவமனைகளில், மருந்துகள் போதிய அளவில் உள்ளதா என, கண்காணியுங்கள். பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின் வாரிய ஊழியர்கள்,24 மணி நேரமும் தயாராகஇருக்க வேண்டும். வெள்ள பாதிப்பு இடங்களில், தீயணைப்பு மீட்பு படையினர் முன்கூட்டியே படகுகளை வைத்திருக்க வேண்டும். அதேபோல், நியாய விலைக்கடைகளில் பொருட்களை இருப்பு வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X