9 வயது சிறுவனின் 750 கி.மீ., மாரத்தான் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

9 வயது சிறுவனின் 750 கி.மீ., 'மாரத்தான்'

Added : அக் 03, 2021
Share
நாகர்கோவில்:வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட 17 அம்ச இலக்கை வலியுறுத்தி ஒன்பது வயது சிறுவன் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 750 கிலோ மீட்டர் ஓட்டத்தை தொடங்கினார்.உலகின் நிலையான வளர்ச்சிக்காக, ஐ.நா.சபை 2015ல் வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் உணவு, ஆரோக்கியம் உட்பட 17 அம்ச இலக்கை அறிவித்து, அதை நிறைவேற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.இது
 9 வயது சிறுவனின்  750 கி.மீ., 'மாரத்தான்'

நாகர்கோவில்:வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட 17 அம்ச இலக்கை வலியுறுத்தி ஒன்பது வயது சிறுவன் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 750 கிலோ மீட்டர் ஓட்டத்தை தொடங்கினார்.
உலகின் நிலையான வளர்ச்சிக்காக, ஐ.நா.சபை 2015ல் வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் உணவு, ஆரோக்கியம் உட்பட 17 அம்ச இலக்கை அறிவித்து, அதை நிறைவேற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னை சாய்ராம் கல்வி நிறுவனங்களின் உதவியுடன் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 750 கி.மீ., துார மாரத்தானுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாம்பரம் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சர்வேஷ், 9, நேற்று காலை கன்னியாகுமரியில் இருந்து ஓட்டத்தை தொடங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்து சிறுவனுடன் 1 கி.மீ., ஓடினார். இதில், சாய்ராம் கல்வி குழும தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து, அறங்காவலவர்கள் சதீஷ்குமார், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பத்து நாட்களில் சென்னையில் இந்த பயணம் நிறைவு பெறும். வழி நெடுகிலும் இரண்டு லட்சம் மரக்கன்று விதைகள் வழங்கப்படும்.மாணவன் சர்வேஷ், 2017ல் நடந்த 1 கி.மீ., பின்னோக்கிய ஓட்டத்தில்ஐந்து வயதில் தேசிய அளவில்சாதனை படைத்ததோடுஏராளமான பதக்கங்கள் பெற்றுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X