பொது செய்தி

தமிழ்நாடு

வார்டு உறுப்பினர் வேட்பாளர் இறப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு:ரெட்டிப்பாளையம் ஊராட்சி வார்டு வேட்பாளர், மாரடைப்பால் இறந்தார். செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் ஊராட்சியில், ஒன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, ஆறு பேர் போட்டியிடுகின்றனர். இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த தமிழரசு, 36, என்பவரும் ஒருவர்.கடந்த 30ம் தேதி, மாரடைப்பால் தமிழரசு இறந்தார். இதை கிராம நிர்வாக அலுவலர் மூலம், தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதி

செங்கல்பட்டு:ரெட்டிப்பாளையம் ஊராட்சி வார்டு வேட்பாளர், மாரடைப்பால் இறந்தார்.

செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் ஊராட்சியில், ஒன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, ஆறு பேர் போட்டியிடுகின்றனர். இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த தமிழரசு, 36, என்பவரும் ஒருவர்.கடந்த 30ம் தேதி, மாரடைப்பால் தமிழரசு இறந்தார். இதை கிராம நிர்வாக அலுவலர் மூலம், தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதி செய்தார்.ஒரு வேட்பாளர் இறந்து விட்டால், எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு:

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, இரண்டுக்கு மேல் இருந்து அதில் ஒரு வேட்பாளர் இறந்துவிட்டால், அவருக்கு வழங்கப்பட்ட சின்னத்துடன் கூடிய ஓட்டுச்சீட்டை வைத்து ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்.

இறந்த வேட்பாளருக்கு வழங்கப்பட்ட சின்னம், ஓட்டுச்சீட்டில் எந்த ஓர் இடத்தில் இருந்தாலும், அதை மறைக்கவோ அல்லது நீக்கவோ கூடாது.இறந்த வேட்பாளரின்இறப்பு குறித்த விபரத்தையும், அவருக்கு வழங்கப்பட்ட சின்னத்தையும், ஓர் அறிவிப்பாக வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுச்சாவடியின் இடத்தில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X