பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா மரணம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
வீரபாண்டி:தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா நேற்று மாரடைப்பால் காலமானார்.மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா என்ற ராஜேந்திரன், 57. சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., தேர்தல் பணிக்குழு செயலருமான இவர், நேற்று காலை 6:30 மணிக்கு வீட்டில் ரத்த அழுத்த குறைவால் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர்
 தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா மரணம்

வீரபாண்டி:தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா நேற்று மாரடைப்பால் காலமானார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா என்ற ராஜேந்திரன், 57. சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., தேர்தல் பணிக்குழு செயலருமான இவர், நேற்று காலை 6:30 மணிக்கு வீட்டில் ரத்த அழுத்த குறைவால் மயங்கி விழுந்தார்.

குடும்பத்தினர் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். பின், அவரது உடல், பூலாவரியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சடங்குகள் செய்து, மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. ராஜாவுக்கு மனைவி சாந்தி, மகள்கள் மலர்விழி, கிருத்திகா உள்ளனர். மகள்கள் இருவரும் மருத்துவர்கள்.

கடந்த 1964 அக்., 2ல் பிறந்த ராஜேந்திரன், 57வது பிறந்த நாளான நேற்று இறந்தது, குடும்பத்தினர் மட்டுமன்றி கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.மறைந்த ராஜா உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பூலாவரியில் உள்ள அவரது தந்தை ஆறுமுகம் சமாதி அருகே, இன்று காலை 11:00 மணியளவில் ராஜா உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X