பொது செய்தி

தமிழ்நாடு

'தொழிற்சாலைகள் துவங்க யாரும் முன்வரவில்லை'

Added : அக் 03, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை:''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதால், தொழிற்சாலைகள் துவங்க யாரும் முன் வருவதில்லை,'' என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில், அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் அமைதி பூங்காவாக விளங்கிய தமிழகம்,
 'தொழிற்சாலைகள் துவங்க யாரும் முன்வரவில்லை'

ராணிப்பேட்டை:''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதால், தொழிற்சாலைகள் துவங்க யாரும் முன் வருவதில்லை,'' என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில், அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் அமைதி பூங்காவாக விளங்கிய தமிழகம், இன்றைக்கு தி.மு.க., ஆட்சியில் தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி நடக்கின்றன. இது நாடா அல்லது அமளிக்காடா என தெரியவில்லை.

இன்றைக்கு தமிழகத்திற்கு அதிகளவு ரவுடிகள் வந்துள்ளனர். இத்தனை ரவுடிகளை கைது செய்துள்ளோம் என பெருமையாக அறிக்கை விடுகிறது தி.மு.க., அரசு. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதால் தான் தொழிற்சாலைகள் துவங்க யாரும் முன்வரவில்லை.

அ.தி.மு.க., ஆட்சியில் மின் தட்டுப்பாடு இல்லை. மின் மிகை மாநிலமாக இருந்தது. இன்றைக்கு அது கேள்விக்குறியாக உள்ளது. தி.மு.க., 505 வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது. எல்லா வாக்குறுதிகளும் காற்றில் பறக்கின்றன. தி.மு.க., பொய் சொல்லி மக்களை ஏமாற்றியது. இதையெல்லாம், அ.தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X