சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி முன் ஜாதி மோதலில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள்

Added : அக் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஜாதி ரீதியாக மோதிக்கொண்ட பிளஸ் 2 மாணவர்கள் ஒன்பது பேர் பள்ளி யில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து செல்லும்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீடியோ வெளியானது. இதுகுறித்து
 பள்ளி முன் ஜாதி மோதலில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள்

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஜாதி ரீதியாக மோதிக்கொண்ட பிளஸ் 2 மாணவர்கள் ஒன்பது பேர் பள்ளி யில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து செல்லும்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீடியோ வெளியானது. இதுகுறித்து போலீசார் விசாரித்தனர்.

பள்ளியில் கரும்பலகை, மேஜைகளில் குறிப்பிட்ட ஜாதி பெயர்களை எழுதிப் போடுவதும் இன்னொரு தரப்பினர் அழிப்பதுமாக தகராறு நடந்துள்ளது. அதை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதால் பள்ளி அருகிலேயே மோதலில் ஈடுபட்டது தெரிந்தது. இரு ஜாதியை சேர்ந்த ஒன்பது மாணவர்கள் நேற்று 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர். அவர்களின் பெற்றோரை வரவழைத்து டி.சி., கொடுக்கப்பட்டது.

2019ல் இதே பள்ளி மாணவர்கள் 50 பேர் வ.உ.சி., மைதானத்தில் ஜாதி தகராறில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து 1330 குறள்களையும் எழுதி கொடுத்துவிட்டு பள்ளிக்கு செல்லும்படி அப்போதைய இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டார்.


மோதலில் இளைஞர்கள்

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம், மேலச்செவல், கோபாலசமுத்திரத்தில் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து ஜாதி ரீதியான கொலைகள் நடந்தன. அங்கு பல்வேறு மாவட்ட எஸ்.பி.,க்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இத்தகைய ஜாதி கொலைகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 18 முதல் 20 வயதுடையவர்கள் தான். இத்தகைய மாணவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு பெற்றோர்களை வரவழைத்து கண்டித்து, அவர்களுக்கு அறிவுரை சொல்லி திருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
03-அக்-202111:24:29 IST Report Abuse
Nellai tamilan ஜாதிகள் இல்லை என்று சொல்லும் பள்ளியில் தான் ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பம் பெறப் படுகிறது. நகைமுரண்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X