பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.நா.சபையின் 17 அம்ச இலக்கை வலியுறுத்தி

Added : அக் 03, 2021
Share
Advertisement
நாகர்கோவில்:வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட 17 அம்ச இலக்கை வலியுறுத்தி ஒன்பது வயது சிறுவன் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 750 கிலோ மீட்டர் ஓட்டத்தை தொடங்கினார்.உலகின் நிலையான வளர்ச்சிக்காக ஐ.நா.சபை 2015ல் வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் உணவு, ஆரோக்கியம், உட்பட 17 அம்ச இலக்கை அறிவித்து அதை நிறைவேற்ற உலக நாடுகள் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. இது
 ஐ.நா.சபையின் 17 அம்ச இலக்கை வலியுறுத்தி

நாகர்கோவில்:வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட 17 அம்ச இலக்கை வலியுறுத்தி ஒன்பது வயது சிறுவன் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 750 கிலோ மீட்டர் ஓட்டத்தை தொடங்கினார்.
உலகின் நிலையான வளர்ச்சிக்காக ஐ.நா.சபை 2015ல் வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் உணவு, ஆரோக்கியம், உட்பட 17 அம்ச இலக்கை அறிவித்து அதை நிறைவேற்ற உலக நாடுகள் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை சாய்ராம் கல்வி நிறுவனங்களின் உதவியுடன் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 750 கி.மீ., துார மாரத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாம்பரம் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சர்வேஷ் என்ற ஒன்பது வயது சிறுவன் நேற்று காலை கன்னியாகுமரியில் இருந்து ஓட்டத்தை தொடங்கினார். அமைச்சர் மனோதங்கராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்து சிறுவனுடன் ஒரு கி.மீ.துாரம் ஓடினார். இதில் சாய்ராம் கல்வி குழும தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து, அறங்காவலவர்கள் சதீஷ்குமார், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பத்து நாட்களில் சென்னையில் இந்த பயணம் நிறைவு பெறும். வழி நெடுகிலும் இரண்டு லட்சம் மரக்கன்று விதைகள் வழங்கப்படுகிறது.மாணவன் சர்வேஷ் 2017ல் நடந்த ஒரு கிமீ. பின்னோக்கி ஓட்டத்தில் ஐந்து வயதில் தேசிய அளவில் சாதனை படைத்ததோடு ஏராளமான பதக்கங்கள் பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X