பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் வர்த்தகம் நடந்தும்உயராத ஏலக்காய் விலை

Added : அக் 03, 2021
Share
Advertisement
கம்பம்:ஆன்லைன் வர்த்தகம் துவங்கி பல மாதங்களை கடந்தும் ஏலக்காய் விலை உயரவில்லை என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கேரளா இடுக்கியில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. அதற்கான செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால் விலை சாகுபடி செலவிற்கு கூட கட்டுபடியாகாத நிலை உள்ளது. ஏலக்காய் வர்த்தகம் ஆன்லைன் மூலம் நடத்த மத்திய வேளாண் அமைச்சகம் அனுமதியளித்தது. புத்தடி,

கம்பம்:ஆன்லைன் வர்த்தகம் துவங்கி பல மாதங்களை கடந்தும் ஏலக்காய் விலை உயரவில்லை என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கேரளா இடுக்கியில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. அதற்கான செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால் விலை சாகுபடி செலவிற்கு கூட கட்டுபடியாகாத நிலை உள்ளது. ஏலக்காய் வர்த்தகம் ஆன்லைன் மூலம் நடத்த மத்திய வேளாண் அமைச்சகம் அனுமதியளித்தது. புத்தடி, வண்டன்மேடு, குமுளி, போடி உள்ளிட்ட பல இடங்களில் ஏலக்காய் ஆன்லைன் வர்த்தகம் நடக்கிறது. அதில் போட்டி அதிகரிக்கும். அதனால் விலை உயரும் என்றனர்.
ஆனால் ஆன்லைன் வர்த்தகம் ஆரம்பித்து பல மாதங்களை கடந்தும் ஏல மையங்களில் கிடைக்கும் விலை போலவே சராசரியாக கிலோவிற்கு ரூ. ஆயிரம் மட்டுமே கிடைத்து வருகிறது. ஆன்லைனில் கூடுதல் வியாபாரிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்த விலை தங்களுக்கு கட்டுபடியாகாது என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X