பொது செய்தி

தமிழ்நாடு

'பள்ளிகள் திறப்பில் எவ்வித மாற்றமும் இல்லை: அமைச்சர்

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருச்சி:''நவம்பர் 1ம் தேதி முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி கள் திறப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில், திருச்சியில் நேற்று நடந்த 'மாரத்தான்' போட்டியை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.அவர்

திருச்சி:''நவம்பர் 1ம் தேதி முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி கள் திறப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில், திருச்சியில் நேற்று நடந்த 'மாரத்தான்' போட்டியை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை

கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெறப்பட்டது.பொது சுகாதார துறை மற்றும் மருத்துவ வல்லுனர்களுடன் கலந்து ஆலோசனை நடத்திய முதல்வர், நவம்பர் 1 முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை திறக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.வகுப்புகளுக்கு தகுந்தாற்போல், 35 முதல் 60 சதவீதம் வரை பாடத்திட்டங்களை குறைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X