சதுரகிரியில் நவராத்திரி விழா பக்தர்களுக்கு அனுமதி இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சதுரகிரியில் நவராத்திரி விழா பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Added : அக் 03, 2021
Share
வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி பிரதோஷம், அமாவாசை, நவராத்திரி வழிபாடுகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இக்கோயிலில் நாளை (அக். 4) பிரதோஷம், அக். 6ல் அமாவாசை , அக். 7 முதல் அக். 15 வரை நவராத்திரி திருவிழா வழிபாடுகள் நடக்க உள்ளது. இவற்றில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி பிரதோஷம், அமாவாசை, நவராத்திரி வழிபாடுகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இக்கோயிலில் நாளை (அக். 4) பிரதோஷம், அக். 6ல் அமாவாசை , அக். 7 முதல் அக். 15 வரை நவராத்திரி திருவிழா வழிபாடுகள் நடக்க உள்ளது. இவற்றில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா தடுப்பிற்காக அரசின் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் மேற்கண்ட விழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சதுரகிரி பக்தர்கள் ஏமாற்றம், மனவேதனை அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X