பஞ்சாப் குழப்பம்: காங்., கட்சி நிர்வாகிகள் புலம்பல்

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
'பஞ்சாப் மாநிலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ், இப்படி ஆகிவிட்டதே' என புலம்புகின்றனர், கட்சியின் மூத்த நிர்வாகிகள். இதற்கு காரணம் ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் தான் என்றும் அவர்கள் முணு முணுக்கின்றனர்.ராகுலோ, என்ன சொல்வது என தெரியாமல் நொந்து போய் உள்ளார். 'கட்சியின் நன்மைக்காக பல முடிவுகள் எடுத்து செயல்படுத்தினால், எனக்கு மட்டும் கடைசியில் இப்படி

'பஞ்சாப் மாநிலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ், இப்படி ஆகிவிட்டதே' என புலம்புகின்றனர், கட்சியின் மூத்த நிர்வாகிகள். இதற்கு காரணம் ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் தான் என்றும் அவர்கள் முணு முணுக்கின்றனர்.



latest tamil news


ராகுலோ, என்ன சொல்வது என தெரியாமல் நொந்து போய் உள்ளார். 'கட்சியின் நன்மைக்காக பல முடிவுகள் எடுத்து செயல்படுத்தினால், எனக்கு மட்டும் கடைசியில் இப்படி ஆகிவிடுகிறதே' என, நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்படுகிறார். மூத்த தலைவர்கள் கோஷ்டிகளை வளர்த்து விடுகின்றனர் என்பதால், அவர்கள் அனைவரையும் ஓரங்கட்டினார் ராகுல். இளைஞர்களை முக்கிய பதவிகளில் நியமித்தார். ஆனால், சீனியர்களோ கட்சியை ஒரு வழியாக்கி வருகின்றனர்.


அமரீந்தர் திட்டம் என்ன?

பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங், சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசினார். 'பாகிஸ்தான் எப்படி பஞ்சாபிற்குள் 'ட்ரோன்' களை அனுப்புகிறது. பாக்., பயங்கரவாதிகளுடன் பஞ்சாபில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது' என, பல தகவல்களை உள்துறை அமைச்சரிடமும், அஜித் தோவலிடமும் எடுத்து சொல்லியதோடு, சில ஆவணங்களையும் கொடுத்துள்ளாராம்.


latest tamil news


தான் முதல்வராகயிருந்த போது கிடைத்த அனைத்து விஷயங்களையும் அமித் ஷாவிடம் சொல்லிவிட்டார். மத்திய உளவுத்துறையிடம் இந்த விபரங்கள் இருந்தாலும், சில நுணுக்கமான விஷயங்களையும் அமரீந்தர் தெரிவித்துள்ளார் என்கின்றனர். தன் பதவிக்கு வேட்டு வைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங்கிற்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், பல விஷயங்களை மத்திய அரசிடம் கூறியுள்ளார் அமரீந்தர். அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் வரை காங்கிரசிலேயே இருந்து குழப்பத்தை உண்டாக்கப் போகிறாராம்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
04-அக்-202115:59:02 IST Report Abuse
திரு.திருராம் \\\\\\\\\\\\கடைசிவரை மோடிஜி ஒய்க'தானா\\\\\\\\\\கடைசிக்கு யோகி ஒழிக கோசம் கேட்கும்,,,இப்போது அத்வானி அத்வானின்னு முதலைக்கண்ணீர் வடிக்கிறாங்க இல்ல? அதுபோல அப்போது மோடி மோடியே பரவாயில்லை அப்படீன்னு முதலைக்கண்ணீர் வடிப்பானுக,,,,ஆனா கடைசி வரை எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடையாது,,,,
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
03-அக்-202114:48:35 IST Report Abuse
mathimandhiri நாட்டைச் சிதைக்கும் துரோகிகளை போட்டுத் தள்ளுங்கள்/////வளர விட வேண்டாம்////
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-அக்-202113:46:31 IST Report Abuse
Bhaskaran அழகிரிபோல் விவரமான சுயமரியாதை இல்லாத தலைவர்கள் மட்டுமே காங்கிரஸுக்கு தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X