பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி விழா; சர்வ மத பிரார்த்தனை

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர், வீரபாண்டி அருகே உள்ள, வித்யாலயம் பள்ளி வளாகம்; காந்தி நகரில் உள்ள தமிழ்நாடு சர்வோதய சங்க வளாகத்தில், அஸ்தி வைத்து, நினைவு மேடை அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சர்வோதய சங்க நிர்வாகிகள் முன்னிலையில், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற, சர்வமத பிரார்த்தனை நிகழ்ச்சி நேற்று, வித்யாலயா வளாகத்தில் நடந்தது. காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தும்
 காந்தி ஜெயந்தி விழா; சர்வ மத பிரார்த்தனை

திருப்பூர் : திருப்பூர், வீரபாண்டி அருகே உள்ள, வித்யாலயம் பள்ளி வளாகம்; காந்தி நகரில் உள்ள தமிழ்நாடு சர்வோதய சங்க வளாகத்தில், அஸ்தி வைத்து, நினைவு மேடை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சர்வோதய சங்க நிர்வாகிகள் முன்னிலையில், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற, சர்வமத பிரார்த்தனை நிகழ்ச்சி நேற்று, வித்யாலயா வளாகத்தில் நடந்தது. காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், கதர்வாரிய ஊழியர்கள், ராட்டையில் நுால் நுாற்றனர். தொடர்ந்து, சர்வமத பிரார்த்தனை நடந்தது.அவிநாசி ரோடு, காந்தி நகர் சர்வோதய சங்க வளாகத்தில், மக்களின் மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறிவியல் இயக்கத்தின் துளிர் இல்ல குழந்தைகள் உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்றனர். காந்தி படத்துக்கு மலர் மரியாதை செய்த, அவரது அஸ்தி வைத்துள்ள மேடைக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினர். காந்திநகர் ஏ.வி.பி., லே அவுட் குடியிருப்போர் நல சங்கம் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட காந்தியடிகள் படத்துக்கு, தலைவர் துரை, சி.ஐ.டி.யு., செயலாளர் ரங்கராஜ், முன்னாள் கவுன்சிலர் ருக்மணி, பொருளாளர் பழனிசாமி உள்ளிட்டோர் மலர்துாவி மரியாதை செலுத்தினர். திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள கதர் பவன் வளாகத்தில், காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சர்வ மத பிரார்த்தனை, தெய்வசிகாமணி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சண்முகம், கோவை முன்னாள் செயலாளர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாநகராட்சி அலுவலர் மற்றும் ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முதல் மண்டல அலுவலகத்தில் உதவி கமிஷனர் சுப்ரமணியம் தலைமையிலும், 4வது மண்டலத்தில், 49 வது வார்டு பகுதியில் துாய்மை பணியாளர்கள் காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தினர். திருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமையில் கட்சியினர், காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு, காமராஜர் படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில செயலாளர் சேதுபதி, செழியன், முத்துசாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X