தமிழ்நாடு

சுருளியாறு மின்நிலையத்தில் மின் உற்பத்தி துவங்குமா

Added : அக் 03, 2021
Share
Advertisement
சுருளியாறு நீர்மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் உதவியுடன் 35 மெகாவாட் மின் உற்பத்தி நடந்தது. பருவமழை காலங்களில் மட்டும் முழுஅளவில் மின் உற்பத்தி நடைபெறும். மற்ற நாட்களில் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை மின் உற்பத்தி நடைபெறும். அவசரத்திற்கு மின்தேவை என்றால், உடனடியாக உற்பத்தி செய்து வழங்கப்படும். இந்த மின்நிலையத்திற்கு இரவங்கலாறு அணையிலிருந்து தண்ணீர் ராட்சத குழாய்

சுருளியாறு நீர்மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் உதவியுடன் 35 மெகாவாட் மின் உற்பத்தி நடந்தது. பருவமழை காலங்களில் மட்டும் முழுஅளவில் மின் உற்பத்தி நடைபெறும். மற்ற நாட்களில் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை மின் உற்பத்தி நடைபெறும். அவசரத்திற்கு மின்தேவை என்றால், உடனடியாக உற்பத்தி செய்து வழங்கப்படும்.

இந்த மின்நிலையத்திற்கு இரவங்கலாறு அணையிலிருந்து தண்ணீர் ராட்சத குழாய் மூலம் கொண்டுவரப்படுகிறது. 979 மீட்டர் உயரத்திலிருந்து இந்த தண்ணீர் வருகிறது. இந்த பைப் கடந்த செப். 4 ல் உடைந்தது. குழாய் உடைந்து ஒரு மாதம் ஆகிறது. இதுவரை குழாய் சீரமைப்பு பணிகள் துவங்கவில்லை.மின்வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, பெரியஅளவிலான பணி என்பதால் அதற்கான மதிப்பீடுகள் தயாரிப்பு, டெண்டர் விடுதல் போன்ற பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் இரவங்கலாறு அணையில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை இப்போதைக்கு உள்ளது. இதை சீரமைப்பு செய்திட மின்வாரிய தலைமை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X