விதைப்புக்கான மழை இல்லை  விவசாயிகள் கவலை 

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி-ஆண்டிபட்டியில் விதைப்புக்கான மழை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி விவசாயம் உள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையை நம்பி ஒவ்வொரு ஆண்டும் சிறுதானியம், பருத்தி, எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள் விதைப்பு செய்வர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை. மழையை எதிர்பார்த்து விவசாயிகள்

ஆண்டிபட்டி-ஆண்டிபட்டியில் விதைப்புக்கான மழை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி விவசாயம் உள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையை நம்பி ஒவ்வொரு ஆண்டும் சிறுதானியம், பருத்தி, எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள் விதைப்பு செய்வர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை. மழையை எதிர்பார்த்து விவசாயிகள் நிலங்களில் உழவு செய்து உரமேற்றி தயார் நிலையில் வைத்திருந்தனர். தென்மேற்கு பருவமழைக்கான காலம் முடிந்தும் விதைப்பு பணியை துவக்க முடியவில்லை. வடகிழக்கு பருவமழையும் கடந்த சில நாட்களாக சாரலாக இருப்பதால் விதைப்பு பணிகள் செய்யவில்லை. மானாவாரி நிலங்களில் விதைப்புக்கான காலம் தள்ளிப்போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X