பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
தேனி-தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேரு யுவகேந்திரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், என்.எஸ்.எஸ்., திட்டத்தின் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விளையாட்டு விடுதி மாணவர்கள், இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. கலெக்டர் முரளீதரன் கொடி அசைத்து துவக்கினார். மரத்தான் ஓட்டம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஜான்

தேனி-தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேரு யுவகேந்திரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், என்.எஸ்.எஸ்., திட்டத்தின் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விளையாட்டு விடுதி மாணவர்கள், இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. கலெக்டர் முரளீதரன் கொடி அசைத்து துவக்கினார். மரத்தான் ஓட்டம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஜான் பென்னிக்குவிக் பஸ் ஸ்டாண்டு, ரயில்வே கேட் பஸ் நிறுத்தம், மதுரை ரோடு, கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.புது பஸ் ஸ்டாண்டில் துாய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஓட்டத்தை கலெக்டர் துவக்கி வைத்து, துாய்மைப் பணியாளர்களுடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார். விழிப்புணர்வு ஓட்டம் புது பஸ் ஸ்டாண்டில் துவங்கி பெரியகுளம் ரோடு வழியாக அன்னஞ்சியில் நிறைவு பெற்றது. திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், நேருயுவகேந்திர துணை இயக்குனர் செந்தில்குமார் பங்கேற்றனர்.*ஆண்டிபட்டி: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பா.ஜ.,மாவட்ட துணைத்தலைவர் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரமணிகணபதி, மூக்கையா, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சரவணன், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆண்டிபட்டி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் தில்லைநடராஜன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம், சர்வோதய காந்திய மண்டல் நிர்வாகி சம்பத், நகர் காங்.,தலைவர் மாசாணம், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், நகர் செயலாளர் ராஜாராம், பூஞ்சோலை அறக்கட்டளை நிர்வாகி சரவணன் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.விழுதுகள் இளைஞர் மன்றம் சார்பில் வைகை அணையில் நடந்த விழாவில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர், துாய்மை பாரத விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வைகை அணை காந்தி சிலை வளாகத்தில் இருந்த பாலிதீன்,பிளாஸ்டிக் குப்பை அப்புறப்படுத்தப்பட்டது. விழுதுகள் இளைஞர் மன்ற துணைத்தலைவர் ரெங்கராஜ், செயலாளர் அஜீத்பாண்டி, பொதுப்பணித்துறையினர் கலந்து கொண்டனர்.பூதிப்புரம்: கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில், காந்தி பிறந்த நாள் விழா வாசகர் வட்டத் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. பொருளாளர் பெரியசாமி வரவேற்றார். முன்னாள் அஞ்சல் அலுவலர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. காந்தியும் நுாலகமும்' என்ற தலைப்பில் ஆலோசகர் வீராவும், காந்தியும் அன்பும்' என்ற தலைப்பில் கருப்பையா பேசினர். முன்னாள் சத்துணவு அமைப்பாளர் ராமராசு, முன்னாள் ராணுவ வீரர் சண்முகவேல், ஆன்மீகப் பேச்சாளர் கோபால்சாமி வாழ்த்தினர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வாசக உறுப்பினர்கள் முத்துலட்சுமணன், வேல்முருகன், பாக்கியலட்சுமி, கலையரசி பங்கேற்றனர்.கம்பம்: நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் காந்திஜெயந்தி விழாவை முன்னிட்டு காந்தியின் அகிம்சா கொள்கை பற்றிய மாணவர்களுக்கு காணொலி மூலம் பேச்சு போட்டி நடந்தது. ஒன்று முதல் 8 ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழங்கினர். பள்ளி தாளாளர் விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, முதல்வர் மோகன் பங்கேற்றனர்.கம்பத்தில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாவட்ட காங்., தலைவர் முருகேசன் தலைமையில் காங்கிரசார் மாலையணிவித்தனர். நகர் தலைவர் போஸ், கவிஞர் பாரதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காமயகவுண்டன்பட்டியில் மாகாத்மா காந்தி ஆலயத்தில் காந்திஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காந்தி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தியாகிகளின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் தலைவர் அரங்கசாமி மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.சின்னமனுார் :சின்னமனுார் காந்திசிலைக்கு கலெக்டர் முரளிதரன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கவுசல்யா, தாசில்தார் அர்ச்சுனன், கமிஷனர் சியாமளா கலந்து கொண்டனர். சின்னமனுார் கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் காந்திஜெயந்தி விழாவை யொட்டி காந்தி சிலைக்கு நிர்வாககுழு தலைவர் சிவமணி தலைமையில் நிர்வாக குழுவினர் மாலையணிவித்தனர். தலைமையாசிரியர் முனிராஜ் பங்கேற்றனர்.சின்னமனுார் மெயின்ரோட்டில் உள்ள காந்திசிலைக்கு ஆம்ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவாஜி தலைமையில் அக்கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.போடி: - போடியில் நகர காந்திஜி- காமராஜர் நற்பணி மன்ற இயக்கம் சார்பில் காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம் மன்ற தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. செயலாளர் காளிமுத்து, நிர்வாக இயக்குநர்கள் சுப்புராஜ், மோகன்தாஸ், பாண்டி, லட்சுமணன், ராமையா, சுந்தரமகாலிங்கம் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.* போடி நகர் காங்., சார்பில் காமராஜர் காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம் நகர தலைவர் முசாக் மந்திரி தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி உட்பட பலர் பங்கேற்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X