பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் சிறையிலடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் சிறையிலடைப்பு

Added : அக் 03, 2021
Share
கோவை : பெண்ணிடம், 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.கோவை பீளமேடு, சேரன் மாநகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சித்திரைசெல்வி, 43; தனியார் நிறுவன மேலாளர். நேற்று முன்தினம் சித்திரைசெல்வி, அம்பாள் நகர் வழியாக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக பைக்கில் வந்த நபர், சித்திரைசெல்வி அணிந்திருந்த, 10 பவுன் செயினை பறித்து,

கோவை : பெண்ணிடம், 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு, சேரன் மாநகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சித்திரைசெல்வி, 43; தனியார் நிறுவன மேலாளர். நேற்று முன்தினம் சித்திரைசெல்வி, அம்பாள் நகர் வழியாக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக பைக்கில் வந்த நபர், சித்திரைசெல்வி அணிந்திருந்த, 10 பவுன் செயினை பறித்து, தப்ப முயன்றார்.அப்போது, பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். சித்திரைசெல்வி சத்தம் கேட்டு, அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை பிடித்தனர். பீளமேடு போலீசார் விசாரித்தபோது, பீளமேடு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சூர்யா, 25 எனத் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X