கரைப்புதுாரில் கிராமசபா குறைந்தளவே மக்கள் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரைப்புதுாரில் கிராமசபா குறைந்தளவே மக்கள் பங்கேற்பு

Added : அக் 03, 2021
Share
பல்லடம் : அதிக மக்கள் தொகை கொண்ட கரைப்புதுார் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்துக்கு குறைந்தளவே மக்கள் பங்கேற்றதால், கூட்டம் இரண்டரை மணி நேரம் தாமதமானது.பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சியில், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நேற்று, இங்கு கிராம சபா கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். காலை 10.00 மணிக்கு கூட்டம் துவங்கும் என

பல்லடம் : அதிக மக்கள் தொகை கொண்ட கரைப்புதுார் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்துக்கு குறைந்தளவே மக்கள் பங்கேற்றதால், கூட்டம் இரண்டரை மணி நேரம் தாமதமானது.

பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சியில், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நேற்று, இங்கு கிராம சபா கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். காலை 10.00 மணிக்கு கூட்டம் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 50க்கும் குறைவானவர்கள் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.இதனால், கூட்டம் நடத்தலாமா அல்லது ஒத்தி வைக்கலாமா என்ற பேச்சு எழுந்தது. மதியம், 1.00 மணி வரை அவகாசம் இருப்பதால், பொறுத்திருந்து பார்க்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இரண்டரை மணி நேரம் கூட்டம் நடக்கவில்லை. மதியம், 12.30 மணிக்கு மேல், நுாற்றுக்கும் அதிகமானோர் வந்ததால், கூட்டம் துவங்கியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X