பொது செய்தி

தமிழ்நாடு

இனி, எப்போதும் பருகலாம் நீரா பானம்  சந்தைக்கு வருகிறது புது தொழில்நுட்பம் 

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோவை : நீரா பானத்தை நீண்ட நேரம் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை, கோவை வேளாண் பல்கலை உருவாக்கியுள்ளது; வணிகப்படுத்தும் நோக்கில், சிறுவாணி உழவர் உற்பத்தி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது.நீரா என்பது தென்னையின் முதிர்ச்சியற்ற பூவில் இருந்து பெறப்பட்ட சுவையான சாறு. கிளைசெமிக் இன்டெக்ஸ் தாதுக்கள், வைட்டமின் நிறைந்துள்ளதால், இது ஒரு ஆரோக்கிய பானம்.

கோவை : நீரா பானத்தை நீண்ட நேரம் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை, கோவை வேளாண் பல்கலை உருவாக்கியுள்ளது;

வணிகப்படுத்தும் நோக்கில், சிறுவாணி உழவர் உற்பத்தி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது.நீரா என்பது தென்னையின் முதிர்ச்சியற்ற பூவில் இருந்து பெறப்பட்ட சுவையான சாறு. கிளைசெமிக் இன்டெக்ஸ் தாதுக்கள், வைட்டமின் நிறைந்துள்ளதால், இது ஒரு ஆரோக்கிய பானம். இப்பானத்தை, பிற குளிர்பானங்களைபோல், நீண்ட நேரம் சேமித்து வைத்து பருக இயலாது.சாறு பிரித்தெடுத்த சில மணி நேரங்களுக்குள், சுற்றுப்புற வெப்ப நிலையில் இயற்கையான நொதித்தலுக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளது. ஆல்கஹால் மற்றும் அமில காரத்தன்மையை அதிலிருந்து குறைத்து புளிக்காமல், பானத்தை பதப்படுத்தும் தொழில்நுட்பம், பல்கலையின் அறுவடைக்கு பிந்தய தொழில்நுட்ப மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.இக்கண்டுபிடிப்பை வணிகப்படுத்தும் நோக்கில், கோவை வேளாண் பல்கலை மற்றும் சிறுவாணி உழவர் உற்பத்தி நிறுவனம் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. பல்கலை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, உற்பத்தி நிறுவன தலைவர் மருதாசலமூர்த்தி ஆகியோர், கையெழுத்திட்டு கோப்புகளை மாற்றிக்கொண்டனர். துணைவேந்தர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.இத்தொழில்நுட்பத்தை கண்டறிந்த, விஞ்ஞானி ஜான் கென்னடியிடம் கேட்டபோது, ''தென்னையில் இருந்து இறக்கி, இரண்டு மணி நேரத்தில் கள்ளாக மாறி விடும். நீரா பானத்தில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இத்தொழில்நுட்பம் மூலம் மூன்று மாதங்கள் குளிர்ச்சியான வெப்பநிலையிலும், ஒரு மாதம் சாதாரண வெப்பநிலையிலும் வைத்து பருகலாம். சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களும் இதனை பருகலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X