பொது செய்தி

தமிழ்நாடு

இரு இடங்களில் பணம், நகை 'லபக்'

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோவை : இரு இடங்களில், நகை, பணம் திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சரவணம்பட்டி, குமரன் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தீபா,39; கூலி தொழிலாளி. சில நாட்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு, சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றார். நேற்று முன்தினம் விடு திரும்பினார். முன்பக்க கதவு உடைந்திருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த எட்டரை பவுன் நகை,

கோவை : இரு இடங்களில், நகை, பணம் திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சரவணம்பட்டி, குமரன் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தீபா,39; கூலி தொழிலாளி.

சில நாட்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு, சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றார். நேற்று முன்தினம் விடு திரும்பினார். முன்பக்க கதவு உடைந்திருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த எட்டரை பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது. சரவணம்பட்டி போலீசார், திருடர்களை தேடி வருகின்றனர்.இதேபோல், கணபதியை சேர்ந்தவர் பிரின்ஸ்ஜோசப்,46; நஞ்சப்பா ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டுச் சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. கல்லாவில் இருந்த ரூ.6,000 மாயமாகியிருந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X