பொது செய்தி

தமிழ்நாடு

மரம் வளர்ப்பு தொழிலாக மாற வேண்டும்

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருப்பூர் : ''விவசாயிகள், மரம் வளர்ப்பை பெரும் தொழிலாக செய்ய முன்வர வேண்டும்,'' என, வனக்கல்லுாரி துறைத்தலைவர் பாலசுப்பிரமணியம் பேசினார்,காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், மரக்கன்று நடும்விழா, பள்ளிபாளையத்தில் நேற்று நடந்தது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த், சுகாதாரத்துறை பூச்சியியல் வல்லுனர் சிவக்குமார், 'வெற்றி'

திருப்பூர் : ''விவசாயிகள், மரம் வளர்ப்பை பெரும் தொழிலாக செய்ய முன்வர வேண்டும்,'' என, வனக்கல்லுாரி துறைத்தலைவர் பாலசுப்பிரமணியம் பேசினார்,காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், மரக்கன்று நடும்விழா, பள்ளிபாளையத்தில் நேற்று நடந்தது.

மாநகர போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த், சுகாதாரத்துறை பூச்சியியல் வல்லுனர் சிவக்குமார், 'வெற்றி' அமைப்பு தலைவர் சிவராம் உள்ளிட்டோர் பேசினர்.மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி துறைத்தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது:விவசாயிகள், பயிர் சாகுபடி செய்வதை போல், தேக்கு, செம்மரம், சந்தன மரங்களை வளர்க்கலாம். விற்பனையின் போது, முறையான அனுமதி பெற்று விற்கலாம். வனத்துறை சட்டங்கள், வனத்துக்குள் உள்ள மரங்கள் வெட்டி, விற்பனை தான் கட்டுப்படுத்தும்.இந்தியாவில், 3 ஆயிரம் ஏக்கரில் செம்மரம் உள்ளன. உலக அளவில், 44 சதவீத தேக்கு மரங்கள், இந்தியாவில் உள்ளன. அரிய வகை மரங்கள் அதிகம் வளர்ந்திருந்தாலும், 100 சதவீத தேவைகளும், இறக்குமதியின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. மரங்களை சந்தைப்படுத்த வழிகாட்டுதல் இல்லை.புளிய மரத்தில் இருந்து கிடைக்கும், கொட்டை, பிசின் கூட, அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மரம், வெளிநாடுகளில் மதிப்பு கூட்டு பொருளாக மாறி, மீண்டும் இங்கேயே இறக்குமதியாகிறது.இந்த நிலை மாற வேண்டும்; இந்தியாவில் மரம் வளர்ப்பு பெரும் தொழிலாக மாற வேண்டும். மரங்களை, சந்தைப்படுத்த கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X