பொது செய்தி

தமிழ்நாடு

தேவைகள் இனி, எளிதாகும்! சட்ட விழிப்புணர்வு முகாமில் நம்பிக்கை

Added : அக் 03, 2021
Share
Advertisement
அவிநாசி : 'திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அவிநாசி வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் 'விழுதுகள் அறக்கட்டளை சார்பில், மூத்த குடிமக்களுக்கான உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் அவிநாசி அருகேயுள்ள புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.அவிநாசி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சுரேஷ்குமார்
 தேவைகள் இனி, எளிதாகும்!   சட்ட விழிப்புணர்வு முகாமில் நம்பிக்கை


அவிநாசி : 'திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அவிநாசி வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் 'விழுதுகள் அறக்கட்டளை சார்பில், மூத்த குடிமக்களுக்கான உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் அவிநாசி அருகேயுள்ள புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

அவிநாசி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சுரேஷ்குமார் வரவேற்றார். அவிநாசி வக்கீல்கள் சங்க தலைவர் ஈஸ்வரன், நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினார்.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் பேசியதாவது:அரசின் உதவி கிடைக்கப்பெறாத மக்களுக்கு, வக்கீல்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து, அவற்றை பெற்றுக் கொடுத்து வருகிறோம். அரசின் நலத்திட்டங்கள், தகுதியான மக்களுக்கு சென்றடைவதை உறுதிபடுத்தி வருகிறோம்.புதுப்பாளையம் கிராமத்தில், வருவாய்த்துறையுடன் இணைத்து, 90 பேருக்கு ஆதார் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு சேவைகளை பெற்றுக் கொடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா, மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி குமார் சரவணன், முதன்மை சார்பு நீதிபதி சந்திரசேகரன், மக்கள் நீதிமன்ற நீதிபதி சுகந்தி, தாசில்தார் ராகவி, ஊராட்சி தலைவர் கஸ்தூரிபிரியா உட்பட பலர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X