பொது செய்தி

தமிழ்நாடு

இப்போதே குழந்தையை தயார்படுத்துங்க!

Added : அக் 03, 2021
Share
Advertisement
வரும் நவ., 1 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அம்மாணவர்களுக்கு மீண்டும் பள்ளி சூழல் எளிதான விஷயமல்ல. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, பள்ளிக்குச் செல்லும் இக்குழந்தைகளை, பெற்றோர் முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும்.குழந்தைகளிடம் பேசுங்கள்ஆன்-லைன் கல்விக்கு குழந்தைகள் பழகி

வரும் நவ., 1 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அம்மாணவர்களுக்கு மீண்டும் பள்ளி சூழல் எளிதான விஷயமல்ல. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, பள்ளிக்குச் செல்லும் இக்குழந்தைகளை, பெற்றோர் முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும்.

குழந்தைகளிடம் பேசுங்கள்ஆன்-லைன் கல்விக்கு குழந்தைகள் பழகி விட்டார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட்ட நிலையில், மீண்டும் பள்ளி என்பதை விரும்ப மாட்டார்கள். குறிப்பாக, எட்டு முதல் ஒன்பது வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வது கடினம்.அவர்களிடம் பள்ளிக்குச் செல்வதன் முக்கியத்துவத்தை பெற்றோர் பேச வேண்டும். குழந்தைகள் நினைப்பதை மனம் விட்டு பேச விடுங்கள். இந்த உரையாடல், பள்ளிக்குச் செல்வதற்கு முன் குழந்தைகளை மனரீதியாக தயார்படுத்தும்.பழக்கத்தை மாற்றவும்

குழந்தைகளின் கல்வி முறை மட்டுமின்றி, அவர்களின் வழக்கமான செயல்பாடுகளான காலையில் எழுவது, உணவு, விளையாட்டு, துாக்கம் என அனைத்தும் மாறியிருக்கும். பள்ளி திறந்த பின், திடீரென சீக்கிரத்தில் எழுவது, கிளம்புவது குழந்தைகளுக்கு அழுத்தத்தை தரலாம்.பள்ளி செல்வதற்கேற்ப, அவற்றை முன்கூட்டியே மாற்றியமைக்க வேண்டும்.

முக்கியமாக, துாக்கம். பள்ளி துவங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே, படிப்படியாக அவர்கள் உறங்கும் நேரம், காலையில் எழுவதை சரிப்படுத்துதல் முக்கியம்.பாதுகாப்பு வழிமுறைபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வைரசின் தாக்கம், தடுக்கும் முறை குறித்து சொல்லித்தர வேண்டும். வைரஸ் குறித்து குழந்தைகளிடம் அச்சம் இருந்தால், பள்ளியில் பாதுகாப்பாக படிக்கலாம் என தைரியப்படுத்துங்கள்.

சமூக விலகல், முகக்கவசம், கைகளுக்கு சானிடைஸ் செய்வதன் மூலம் வைரஸ் வராமல் தடுக்க முடியும் என சொல்லுங்கள். வீட்டிலிருந்து கொடுக்கப்படும் உணவை சாப்பிடுவது, சொந்த பாட்டிலில் தண்ணீர் பருகுவது, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் போன்ற அடிப்படை சுகாதார முறைகளை பின்பற்ற கற்றுக்கொடுங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X