இன்று, 4வது மெகா முகாம் 81,120 பேருக்கு தடுப்பூசி இலக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று, 4வது மெகா முகாம் 81,120 பேருக்கு தடுப்பூசி இலக்கு

Added : அக் 03, 2021
Share
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 672 மையங்களில், இன்று கொரோனா சிறப்பு முகாம் நபைபெற உள்ளது; 81,120 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட, தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள், 20 லட்சத்து, 77 ஆயிரத்து, 95 பேர் இருப்பதாக, சுகாதாரத்துறை கணக்கிட்டுள்ளது. இதுவரை, 15 லட்சத்து, 5 ஆயிரத்து, 290 பேர் முதல் 'டோஸ்'

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 672 மையங்களில், இன்று கொரோனா சிறப்பு முகாம் நபைபெற உள்ளது;

81,120 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட, தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள், 20 லட்சத்து, 77 ஆயிரத்து, 95 பேர் இருப்பதாக, சுகாதாரத்துறை கணக்கிட்டுள்ளது. இதுவரை, 15 லட்சத்து, 5 ஆயிரத்து, 290 பேர் முதல் 'டோஸ்' தடுப்பூசி செலுத்தியுள்ளனர்; மூன்று லட்சத்து, 62 ஆயிரத்து, 823 பேர், இரண்டாவது 'டோஸ்' தடுப்பூசியும் போட்டுள்ளனர்.விடுப்பட்டவர்களில், ஐந்து லட்சத்து, 71 ஆயிரத்து, 805 பேர் முதல் 'டோஸ்' தடுப்பூசியும், 57 ஆயிரத்து, 297 பேர், இரண்டாவது 'டோஸ்' தடுப்பூசியும் செலுத்த வேண்டுமென கணக்கிடப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த மூன்று முகாம்களில், 2.91 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.இந்நிலையில், இன்றும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. 631 நிலையான முகாம்கள்; 41 நடமாடும் முகாம்களில், இன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 வரை முகாம் நடக்க உள்ளது. சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள்; அங்கன்வாடி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் முகாம் நடக்க உள்ளது.இதுகுறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நாளை (இன்று) நடக்கும் முகாமில், 81ஆயிரத்து, 120 நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றை முழுவதும் ஒழிக்க, சமூக இடைவெளியை கடைபிடித்து, வெளியே வரும் போது முககவசம் அணிந்து கொள்ள வேண்டும். சிறப்பு முகாமில், விடுபட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X