பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுதங்கள் விற்பனை கண்காணிக்குமா போலீஸ்?

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோவை : வட மாநிலங்களில் இருந்து, குடும்பமாக இடம் பெயர்ந்து, அரிவாள் உள்ளிட்ட இரும்பு ஆயுதங்களை விற்பனை செய்யும் தொழிலாளர்களை, போலீசார் எவ்வாறு கண்காணிக்கப் போகின்றனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில், ரவுடிகளின் கொட்டத்தை அடக்க, 'ஆபரேஷன் டிஸ் ஆர்ம்' என்ற பெயரில், அதிரடி வேட்டையை போலீசார் துவக்கியுள்ளனர். 3,000க்கும் அதிகமான ரவுடிகள் கைது செய்யப்பட்டு,

கோவை : வட மாநிலங்களில் இருந்து, குடும்பமாக இடம் பெயர்ந்து, அரிவாள் உள்ளிட்ட இரும்பு ஆயுதங்களை விற்பனை செய்யும் தொழிலாளர்களை, போலீசார் எவ்வாறு கண்காணிக்கப் போகின்றனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில், ரவுடிகளின் கொட்டத்தை அடக்க, 'ஆபரேஷன் டிஸ் ஆர்ம்' என்ற பெயரில், அதிரடி வேட்டையை போலீசார் துவக்கியுள்ளனர். 3,000க்கும் அதிகமான ரவுடிகள் கைது செய்யப்பட்டு, ஆயிரத்துக்கும் அதிகமான கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர் நடவடிக்கையாக, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் யார் வாங்கினாலும், அவர்களது விபரம் சேகரிக்கவும், கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, வடமாநிலத்தவர்கள் குடும்பமாக வந்து, இரும்பில் ஆயுதங்களைச் செய்து தரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து, 80 குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில், சாலையோரங்களில் தங்கியுள்ளனர். இவர்கள், கத்தி, அரிவாள், மண்வெட்டி, கொத்து உள்ளிட்ட இரும்புக் கருவிகளை அடித்துத் தருகின்றனர்.இவர்களிடம், அரிவாள் வாங்குவோரின் விபரங்களைச் சேகரிப்பது கடினம். அவ்வழித்தடத்தில் செல்வோர், இவர்களைக் பார்த்ததும், ஆயுதங்கள் வாங்கிச் செல்கின்றனர். அவர்களது விபரத்தை சேகரித்து வைத்திருப்பதில்லை. இப்பிரச்னையை போலீசார் கவனமாக கையாள வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X