பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளை வைத்து பிச்சை இனி பாருங்க நடவடிக்கையை!

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோவை : சிக்னல்களில் நின்று, குழந்தைகளை காட்டி, பிச்சை எடுக்கும் நபர்கள் குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.வட மாநிலங்களை சேர்ந்த சிலர், கோவையில் பல்வேறு சிக்னல்களில் நின்று, குழந்தைகளை காட்டி பிச்சை எடுக்கும் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயில், மழை, குளிர் என பார்க்காமல், பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம்

கோவை : சிக்னல்களில் நின்று, குழந்தைகளை காட்டி, பிச்சை எடுக்கும் நபர்கள் குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வட மாநிலங்களை சேர்ந்த சிலர், கோவையில் பல்வேறு சிக்னல்களில் நின்று, குழந்தைகளை காட்டி பிச்சை எடுக்கும் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயில், மழை, குளிர் என பார்க்காமல், பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகளுடன் வலம் வருகின்றனர்.குழந்தையுடன் பிச்சை கேட்பதால், சிலர் மனம் இளகி, அவர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். ஆனால், குழந்தை படும் பாடு மிகவும் கொடுமையாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் உள்ள இக்காலத்தில் முகக்கவசம் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பச்சிளம் குழந்தையை கையில் ஏந்தி பிச்சை எடுப்பதை தடுக்க, பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறுகையில்,''சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. கோவை மாவட்டத்தில், 15 இடங்கள் கண்டறிப்பட்டுள்ளன. ''குழந்தைகளை கடத்தி வந்து பிச்சை எடுக்கின்றனரா அல்லது, அவர்கள் குழந்தைகளையே பிச்சை எடுக்க பயன்படுத்துகின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம். வடமாநிலத்தவர்களே, குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கின்றனர். ஆய்வு முடிவுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X