தமிழ்நாடு

புதைகுழி! கோவை-விளாங்குறிச்சி ரோட்டில்...காஸ் குழாய் பதிக்கும் பணி மந்தம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோவை கோவை - விளாங்குறிச்சி சாலையில், காஸ் குழாய் பதிக்கும் பணி மந்தமாக நடக்கிறது. குழாய் பதிக்க தோண்டிய குழிகளை சரிவர மூடாததால், புதைகுழியாக காட்சியளிக்கின்றன. சில நாட்களாக மழை பெய்து வருவதால், ரோட்டில் தண்ணீர் தேங்கி சகதியாகி விட்டது. அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள், மண்ணுக்குள் புதைகின்றன.சிங்காநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி ரோடு, அவிநாசி ரோடு மற்றும்
 புதைகுழி!   கோவை-விளாங்குறிச்சி ரோட்டில்...காஸ் குழாய் பதிக்கும் பணி மந்தம்


கோவை கோவை - விளாங்குறிச்சி சாலையில், காஸ் குழாய் பதிக்கும் பணி மந்தமாக நடக்கிறது. குழாய் பதிக்க தோண்டிய குழிகளை சரிவர மூடாததால், புதைகுழியாக காட்சியளிக்கின்றன.

சில நாட்களாக மழை பெய்து வருவதால், ரோட்டில் தண்ணீர் தேங்கி சகதியாகி விட்டது. அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள், மண்ணுக்குள் புதைகின்றன.சிங்காநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி ரோடு, அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோட்டுக்குச் செல்ல பிரதான வழித்தடமாக இருக்கிறது. கடந்த, 10 ஆண்டுகளாக இச்சாலை புதுப்பிக்கப்படவே இல்லை.இச்சூழலில், கடந்த நான்கு மாதங்களாக, இந்த ரோட்டில், காஸ் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. சாலை நடுவே, 5 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தோண்டப்பட்ட ரோட்டை சரிவர மூடாததால், மேடு பள்ளமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. மழையும் பெய்து வருவதால், சகதியுமாக மாறியுள்ள இச்சாலையில், வாகனங்கள் அடிக்கடி சிக்கிக் கொள்கின்றன. அதனால், போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது.அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'நிமிடத்துக்கு ஒரு வாகனம் சேற்றில் சிக்கிக்கொள்கிறது. இதன் காரணமாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தினமும் விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்வோர் வரை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ரோட்டின் இருபுறமும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால், சாலையை கடக்கவே முடிவதில்லை' என்றனர்.சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயராமிடம் கேட்டபோது, ''அவிநாசி ரோடு முதல் கொடிசியா வரை, ஐ.டி., பார்க் முதல் விளாங்குறிச்சி ரோடு வரை, சாலை மேம்பாட்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில், அவிநாசி ரோடு முதல் கொடிசியா வரை சாலை பணி நிறைவடைந்து விட்டது. ஐ.டி., பார்க் முதல் விளாங்குறிச்சி ரோடு வரையிலான பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது.''இந்த ரோட்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், காஸ் குழாய் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்பணி மிகவும் மந்தகதியில் நடந்து வருகிறது. இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர், கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டது. இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகளை முடிக்காவிட்டால், மறியலில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X