பொது செய்தி

தமிழ்நாடு

2 ஆண்டுக்கு பின் கிராமசபா கூட்டம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருப்பூர் : கொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுக்கு பிறகு, நேற்று கிராமசபா கூட்டம் நடந்தது.காந்திஜெயந்தி விழா கிராமசபா கூட்டம், நேற்று நடந்தது. உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கும், ஊராட்சிகள் நீங்கலாக, 210 ஊராட்சிகளில், நேற்று கிராமசபா கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மங்கலம் ஊராட்சியில், அக்ரஹாரப்புத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கிராமசபா கூட்டம், தலைவர்

திருப்பூர் : கொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுக்கு பிறகு, நேற்று கிராமசபா கூட்டம் நடந்தது.

காந்திஜெயந்தி விழா கிராமசபா கூட்டம், நேற்று நடந்தது. உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கும், ஊராட்சிகள் நீங்கலாக, 210 ஊராட்சிகளில், நேற்று கிராமசபா கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மங்கலம் ஊராட்சியில், அக்ரஹாரப்புத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கிராமசபா கூட்டம், தலைவர் மருதாசலமூர்த்தி தலைமையில் நடந்தது. தொரவலுார் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்தில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி, பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. காந்திஜெயந்தியை முன்னிட்டு, ஊராட்சி தலைவர் தேவகி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கணக்கம்பாளையம் ஊராட்சியில், கிராமசபா கூட்டம், தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. அலுவலக வளாகத்தில், சமூக இடைவெளியுடன் நடத்தி, சுகாதாரம், கொரோனா தடுப்பு பணி, குடிநீர் வசதி உள்ளிட்ட தேவைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X