போலீஸ் செய்திகள்

Added : அக் 03, 2021
Share
Advertisement
மொபைல்போன் பறிப்புசோமனுாரைச் சேர்ந்தவர் சஞ்சை,21. நேற்று முன்தினம், கோவை ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்தார். 50 வயதுடைய ஒருவர், அவசரமாக போன் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். சஞ்சை, அவரது மொபைல்போனை கொடுத்தார். மொபைல்போனுடன் அந்நபர் 'எஸ்கேப்' ஆனார். ரயில்வே போலீசார் விசாரித்து, கிருஷ்ணகிரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இளம்பெண் பலிகோவை,

மொபைல்போன் பறிப்பு
சோமனுாரைச் சேர்ந்தவர் சஞ்சை,21. நேற்று முன்தினம், கோவை ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்தார். 50 வயதுடைய ஒருவர், அவசரமாக போன் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். சஞ்சை, அவரது மொபைல்போனை கொடுத்தார். மொபைல்போனுடன் அந்நபர் 'எஸ்கேப்' ஆனார். ரயில்வே போலீசார் விசாரித்து, கிருஷ்ணகிரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இளம்பெண் பலி

கோவை, சுந்தராபுரம், காந்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி; மனைவி அபிநயா,28. நான்கு மாதங்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் நடந்தது. ரத்தினபுரி மருதக்குட்டி வீதியில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அபிநயா, தண்ணீர் குடத்தை துாக்கினார். திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தததில், தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரத்தினபுரி போலீசார் விசாரிக்கின்றனர்.

மின் ஒயர்கள் திருட்டு

சின்ன தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வரப்பாளையம் பொன்னுாத்து அம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் சத்தியமூர்த்தி,52; விவசாயி. இவருடைய தோட்டத்தில், 120 மீட்டர் நீளமுள்ள மின் ஒயர்கள் மற்றும் மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை யாரோ திருடிச் சென்றனர். தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அழுகிய நிலையில் ஆண் சடலம்

கோவை, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, வேட்டைக்காரன் கோவில் தெரு அருகில், விமான நிலையம் சுற்றுச்சுவர் பின்புறம் உள்ள முள்வேலிகள் உள்ள காலியிடம் உள்ளது. இப்பகுதியில், 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கஞ்சா, மதுப்பழக்கம் உள்ளவர்கள் கூடும் பகு என்பதால், உயிரிழந்தவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X