பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் பங்கேற்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினரால் சலசலப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
பல்லடம் : கோடங்கிபாளையத்தில், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, வார்டு உறுப்பினர் ஒருவர், 'இத்துடன் கிராமசபை' முடிந்தது' என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.பல்லடம் அருகே கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதிபாளையம் அரசு பள்ளியில் நேற்று கிராமசபா நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலை

பல்லடம் : கோடங்கிபாளையத்தில், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, வார்டு உறுப்பினர் ஒருவர், 'இத்துடன் கிராமசபை' முடிந்தது' என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.பல்லடம் அருகே கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதிபாளையம் அரசு பள்ளியில் நேற்று கிராமசபா நடந்தது.

கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.அதில், பொதுமக்கள் பேசியதாவது:கல்குவாரிகள், கிரஷர் நிறுவனங்களால் கிராமத்தில் வாழ இயலாத நிலை உள்ளது. பள்ளி, குடியிருப்புகளுக்கு அருகில் கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. போதிய பஸ் வசதி இல்லை. காரணம்பேட்டையில் மாட்டு சந்தை அமைக்க வேண்டும்.எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள மதுக்கடையால், பெண்கள், சிறுமியர் இவ்வழியே செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். நீர் வழித்தடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் தங்களது கிராமத்தின் குறைகளை கொட்டி தீர்த்தனர்.அப்போது, மைக்கை வலுக்கட்டாயமாக வாங்கிய வார்டு உறுப்பினர் நடராஜ் என்பவர், ''நட்புறவுடன் உள்ள பொதுமக்களிடம் வேண்டுமென்றே சிலர் பகையை ஏற்படுத்த நினைக்கின்றனர். எனவே, இதையெல்லாம் யாரும் மனதில் வைக்க வேண்டாம். இத்துடன் இந்த கிராமசபா கூட்டத்தை முடித்து கொள்வோம்,'' என்று பேசினார்.பொதுமக்கள் பலர் கோரிக்கைகளை கலெக்டரிடம் வலியுறுத்த பலரும் காத்துக் கொண்டிருந்த சூழலில், வார்டு உறுப்பினர் நடராஜின் பேச்சு, கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.இருப்பினும், அனைவரின் கோரிக்கைகளையும் கலெக்டர் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X