சகோதரியுடனான பழக்கத்தை கண்டித்த தம்பிக்கு கத்திக்குத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சகோதரியுடனான பழக்கத்தை கண்டித்த தம்பிக்கு கத்திக்குத்து

Added : அக் 03, 2021
Share
கோவை : பெண்ணுடனான பழக்கத்தை கண்டித்த சகோதரரை, கத்தியால் குத்திய காதலனை, போலீசார் தேடி வருகின்றனர்.வடவள்ளி, இடையர்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ராஜகோபால்,34. இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண் குடும்பத்தினர், அவரை கண்டித்தனர். இருப்பினும் தொடர்ந்து பழகி வந்தனர். இதையறிந்த இளம்பெண்ணின் சகோதரர், ராஜகோபாலை கண்டித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட

கோவை : பெண்ணுடனான பழக்கத்தை கண்டித்த சகோதரரை, கத்தியால் குத்திய காதலனை, போலீசார் தேடி வருகின்றனர்.

வடவள்ளி, இடையர்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ராஜகோபால்,34. இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண் குடும்பத்தினர், அவரை கண்டித்தனர். இருப்பினும் தொடர்ந்து பழகி வந்தனர். இதையறிந்த இளம்பெண்ணின் சகோதரர், ராஜகோபாலை கண்டித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறால், முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று இளம்பெண்ணை சந்திக்க ராஜகோபால், பெண்ணின் வீட்டுக்குச் சென்றார். .
அங்கிருந்த அவரது சகோதரர் தடுத்தார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில், அவரை கத்தியால் குத்தி விட்டு ராஜகோபால் தப்பினார். கோவை அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணின் சகோதரர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். வடவள்ளி போலீசார் ராஜகோபாலை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X