பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: சண்டை போடச் சொல்லும் அமைச்சர்!

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.தாமோதரன், பாபநாசம், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு போனோமா, தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசி ஓட்டு கேட்டோமா என இல்லாமல், தேவையில்லாதவற்றை பேசி வன்முறையை துாண்டியுள்ளார், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.'பஸ்சில்
இது, உங்கள், இடம்.


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



ஆர்.தாமோதரன், பாபநாசம், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு போனோமா, தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசி ஓட்டு கேட்டோமா என இல்லாமல், தேவையில்லாதவற்றை பேசி வன்முறையை துாண்டியுள்ளார், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.'பஸ்சில் நடத்துனர்கள் தரக்குறைவாக நடந்தால், அவர்களை பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும்' என முழங்கி இருக்கிறார்.

ஊருக்குள் நுழைந்த புலியை, சங்க கால தமிழ் பெண்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் முறத்தால் அடித்து விரட்டியதாக புலவர்கள் பாடல் எழுதி உள்ளனர்.இந்த 21ம் நுாற்றாண்டில், தமிழகத்தில் வாழும் பெண்கள் யாரும், கையில் முறத்துடன் வெளியில் செல்வதில்லை. இன்றைய நவீன கால பெண்கள் பலருக்கு முறம் என்றால் என்னவென்றே தெரியாது.அந்த பெண்களிடம் தான், 'ஹேண்ட் பேக்' எடுத்து செல்லாவிட்டாலும் பரவாயில்லை. கையில் ஒரு முறத்துடன் பஸ்சில் செல்லுங்கள் என ஆலோசனை சொல்கிறார், அமைச்சர் துரைமுருகன். அதுவும் அந்த முறத்தால், தரக்குறைவாக நடக்கும் நடத்துனர்களை அடிக்கச் சொல்லி துாண்டி விடுகிறார். தி.மு.க., அமைச்சருக்கே, ஆட்சி நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு மீது நம்பிக்கை இல்லை போலும்!


latest tamil news


போலீஸ், நீதிமன்றம் ஏதும் இனி தேவையில்லையோ?இப்போது, முறங்கள் பலவிதமான அளவுகளில் கிடைக்கின்றன. அவற்றில் எந்த அளவிலான முறத்தை தமிழக பெண்கள் கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் துரைமுருகன் கூறினால், அடிப்பதற்கு வசதியாக இருக்கும்.பெண்கள் அடிக்கும் போது நடத்துனர்கள் திருப்பி அடிக்க கூடாது என, தி.மு.க., அரசு உத்தரவு ஏதும் பிறப்பித்து இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.எது எப்படியோ, மாநிலத்தில் சண்டை நடக்கணும் என எதிர்பார்க்கிறார் அமைச்சர் துரைமுருகன்!

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
03-அக்-202122:22:31 IST Report Abuse
Subramaniyam Veeranathan மக்களுக்கு ஏன் சட்டம் ஒழுங்குமேல் நம்பிக்கை இல்லை என்று நீதித்துறையும் அரசாள்பவர்களும் அவர்களின் சுயநலத்தினால் யோசிப்பதில்லை. இப்போதெல்லாம் போலீசுக்கு சென்றால் FIR போடுவதில்லை, கோர்ட்டுக்கு சென்றால் இப்பிறவியில் நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை. நீதி வக்கீல்களின் வாத திறமையின் அடிப்படியில்தான் மட்டுமே பல வருடங்கள் கழித்தே வழங்கப்படுகிறது. அதற்குத்தான் அரசியல்வாதிகள் ரௌடிகளையும் சமூகவிரோதிகளையும் நம்பி வாழ்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த எதார்த்தம். அதற்க்காக இவர் கருத்தை நான் ஆமோதிக்கவில்லை.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
03-அக்-202114:25:22 IST Report Abuse
r.sundaram அடுத்த இலவச திட்டம் ரெடி. இலவச முறம் வழங்கும் திட்டம், ஓட்டுநர் நடத்துனர்களை அடித்து துரத்துவதற்கு.
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
03-அக்-202114:13:39 IST Report Abuse
S.kausalya இலவசமாக பயணிக்கிறார்கள் என்பதால் இளம் மாணவ மணிகளையே கேவலமாக நடத்துபவர்கள் இந்த அரசு நடத்துனர்கள். ஓட்டுநர் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்த மாட்டார். பாதி பேர். யேறும்போதே நடத்துநர் விசில் அடிப்பார். ஓட்டுநர் பஸ்சை கிளப்பி விடுவார். அப்படி இருக்க பெண்கள் என்றால் தங்கள் வீரத்தை kaanbikkaamal விடுவார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X