இது உங்கள் இடம்: சண்டை போடச் சொல்லும் அமைச்சர்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: சண்டை போடச் சொல்லும் அமைச்சர்!

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (36)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.தாமோதரன், பாபநாசம், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு போனோமா, தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசி ஓட்டு கேட்டோமா என இல்லாமல், தேவையில்லாதவற்றை பேசி வன்முறையை துாண்டியுள்ளார், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.'பஸ்சில்
இது, உங்கள், இடம்.


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.தாமோதரன், பாபநாசம், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு போனோமா, தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசி ஓட்டு கேட்டோமா என இல்லாமல், தேவையில்லாதவற்றை பேசி வன்முறையை துாண்டியுள்ளார், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.'பஸ்சில் நடத்துனர்கள் தரக்குறைவாக நடந்தால், அவர்களை பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும்' என முழங்கி இருக்கிறார்.

ஊருக்குள் நுழைந்த புலியை, சங்க கால தமிழ் பெண்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் முறத்தால் அடித்து விரட்டியதாக புலவர்கள் பாடல் எழுதி உள்ளனர்.இந்த 21ம் நுாற்றாண்டில், தமிழகத்தில் வாழும் பெண்கள் யாரும், கையில் முறத்துடன் வெளியில் செல்வதில்லை. இன்றைய நவீன கால பெண்கள் பலருக்கு முறம் என்றால் என்னவென்றே தெரியாது.அந்த பெண்களிடம் தான், 'ஹேண்ட் பேக்' எடுத்து செல்லாவிட்டாலும் பரவாயில்லை. கையில் ஒரு முறத்துடன் பஸ்சில் செல்லுங்கள் என ஆலோசனை சொல்கிறார், அமைச்சர் துரைமுருகன். அதுவும் அந்த முறத்தால், தரக்குறைவாக நடக்கும் நடத்துனர்களை அடிக்கச் சொல்லி துாண்டி விடுகிறார். தி.மு.க., அமைச்சருக்கே, ஆட்சி நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு மீது நம்பிக்கை இல்லை போலும்!


latest tamil news


போலீஸ், நீதிமன்றம் ஏதும் இனி தேவையில்லையோ?இப்போது, முறங்கள் பலவிதமான அளவுகளில் கிடைக்கின்றன. அவற்றில் எந்த அளவிலான முறத்தை தமிழக பெண்கள் கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் துரைமுருகன் கூறினால், அடிப்பதற்கு வசதியாக இருக்கும்.பெண்கள் அடிக்கும் போது நடத்துனர்கள் திருப்பி அடிக்க கூடாது என, தி.மு.க., அரசு உத்தரவு ஏதும் பிறப்பித்து இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.எது எப்படியோ, மாநிலத்தில் சண்டை நடக்கணும் என எதிர்பார்க்கிறார் அமைச்சர் துரைமுருகன்!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X