பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசியில் அடைமழை சாலைகளில் வெள்ளம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசியில், கடந்த 20 ஆண்டில் இல்லாத அளவுக்கு கனமழை நேற்றிரவு பெய்தது.அவிநாசி வட்டாரத்தில், தென்மேற்கு பருவமழை இயல்பாக பெய்தது. ஆனால், வடகிழக்கு பருவ மழை துவக்கத்திலேயே 'சக்கைப்போடு' போடுகிறது. கடந்த, இரண்டு நாளுக்கு முன்னர் தான், மழை துவங்கிய நிலையில், அவிநாசி வட்டாரத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது.நேற்று முன்தினம் காலை சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதலே,

அவிநாசி : அவிநாசியில், கடந்த 20 ஆண்டில் இல்லாத அளவுக்கு கனமழை நேற்றிரவு பெய்தது.

அவிநாசி வட்டாரத்தில், தென்மேற்கு பருவமழை இயல்பாக பெய்தது. ஆனால், வடகிழக்கு பருவ மழை துவக்கத்திலேயே 'சக்கைப்போடு' போடுகிறது. கடந்த, இரண்டு நாளுக்கு முன்னர் தான், மழை துவங்கிய நிலையில், அவிநாசி வட்டாரத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது.நேற்று முன்தினம் காலை சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதலே, வாகனம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு, 9:00 மணிக்கு மேல் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்தது. வேட்டுவபாளையம், நம்பியாம்பாளையம், கருவலுார் உட்பட பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.அவிநாசி பேரூராட்சி பகுதியில் பெய்த கனமழை காரணமாக, சேவூர் ரோடு வெள்ளக்காடானது. இரு சக்கர வாகன ஓட்டிகள், வண்டியை ஓட்ட முடியாமல் அவதிப்பட்டனர். அவிநாசி வட்டாரத்தில், இன்றும் மழை இருக்கும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X