பொது செய்தி

தமிழ்நாடு

'கூரியர்' இன்றி அமையாது தொழில்...!

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஆன்லைன்' தொழிலின் வளர்ச்சியால், இந்தியாவில் உள்நாட்டு கூரியர் சேவைகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. ஆனால், கூரியர் கட்டணங்கள், பொருட்களின் விலையை கூட்டி விடுகின்றன. இதனால் பலர் 'ஆன்லைன்' வர்த்தகம் செய்வதில் லாபம் பெற முடிவதில்லை.'ஷிப் ராக்கெட்' (Ship Rocket) என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி, சிறு வணிகர்களும் ஆன்லைன் வணிகம் செய்யும்போது குறைந்த கட்டணத்தில் கூரியர் சேவைகளை


ஆன்லைன்' தொழிலின் வளர்ச்சியால், இந்தியாவில் உள்நாட்டு கூரியர் சேவைகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. ஆனால், கூரியர் கட்டணங்கள், பொருட்களின் விலையை கூட்டி விடுகின்றன.

இதனால் பலர் 'ஆன்லைன்' வர்த்தகம் செய்வதில் லாபம் பெற முடிவதில்லை.'ஷிப் ராக்கெட்' (Ship Rocket) என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி, சிறு வணிகர்களும் ஆன்லைன் வணிகம் செய்யும்போது குறைந்த கட்டணத்தில் கூரியர் சேவைகளை வழங்க பல கூரியர் கம்பெனிகளுடன் கூட்டுறவு வைத்துள்ளது. இதனால், சிறு வணிகர்கள், குறிப்பாக சிறு, குறு கம்பெனிகள் குறைந்த கூரியர் சேவை கட்டணத்தால் பயனடைய முடிகிறது.ஒரு லட்சத்துக்கும் அதிகமான கம்பெனிகள், தற்போது இவர்களுடன் கூரியர் சேவைகளுக்காக இணைந்துள்ளனர்.

17க்கும் அதிகமான கூரியர் கம்பெனிகளுடன் கூட்டு வைத்துள்ளனர். இந்தியாவில், 29 ஆயிரம் ஊர்களுக்கு டெலிவரி செய்கின்றனர். நீங்கள் கூரியர் கம்பெனிகளுடன் நேரடியாக சென்று கூரியர் வசதிகளை ஏற்படுத்தி கொள்ளும் போது உடன்படும் கட்டணத்தை விட, மிகக்குறைவான கட்டணத்தில் கூரியர் சேவைகளை உங்களுக்கு வழங்குகிறார்கள்.ஷிப்பிங் ஆட்டோமேஷன்கூரியர் நிறுவனத்தைத் தேர்வு செய்யவும், ஷிப்பிங் லேபிள்களை அச்சிடவும், ஒரே பேனலில் இருந்து ஆர்டர்களை கண்காணிக்கவும் 'ஷிப் ராக்கெட்' கம்பெனியின் சாப்ட்வேர் உதவி செய்கிறது.

இதை அமேசான், இ-பே, மெஜென்டோ, ஓபன்கார்ட் போன்ற எந்த ஒரு இணையவழி தளத்துடனும் ஒருங்கிணைக்க முடியும்.ஷிப்பிங் ஆட்டோமேஷனை தவிர, பெடெக்ஸ், ப்ளூடர்ட், அராமெக்ஸ், பர்ஸ்ட்ப்ளைட், புரபெஷனல் மற்றும் இ-காம் எக்ஸ்பிரஸ் போன்ற பல கூரியர் கம்பெனிகளுடன் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தப்படி குறைவான சரக்கு கட்டணங்களை வழங்குகிறது.முக்கிய அம்சங்கள்l ஷிப்பிங் செலவை குறைத்து, உங்களுடைய 'ரீச்' அதிகரிக்க செய்கிறது.l கேஷ் ஆன் டெலிவரி வசதிகளும் செய்து தருகின்றனர். அதாவது, உங்களது பொருட்களை வாங்கியவரிடம் ஒப்படைத்து, அவரிடமிருந்து அதற்கான பணத்தை வாங்கி, அதை உங்கள் கணக்கிற்கு அனுப்புவது. மாதந்தோறும் எத்தனை கூரியர்கள் அனுப்புகிறீர்கள் என்பதை வைத்து, எந்த கூரியர் உங்களுக்கு சரியான கூரியர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

வியாபாரம் பெருகநேரடியாக வாடிக்கையாளர்களுக்கு (Direct to Consumer) சரக்குகளை விற்கும் எந்த நிறுவனத்துக்கும் உதவலாம். நல்ல பொருட்கள் தயாரிப்பவர்கள் தங்களுடைய வியாபாரங்களை விரிவுபடுத்த இது போன்ற கூரியர் அக்ரிகேட்டர்கள் உதவி செய்வார்கள். அது, உங்கள் வியாபாரங்களை அடுத்த கட்டத்துக்கும், பல ஊர்களுக்கும் ஏன் பல மாநிலங்களுக்கும் எடுத்து செல்ல உதவி புரியும். இணையதளம்: www.shiprocket.comசந்தேகங்களுக்கு: இ--மெயில்: sethuraman.sathappan@gmail.comஇணையதளம்: www.startupandbusinessnews.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X