பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணியருக்கு தடுப்பூசி

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணியர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.நீலகிரி மாவட்டத்தில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால், அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டன.இரண்டாம் சீசன் நிலவி வருவதால், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. தினமும், 15 ஆயிரம் பேர் வரை ஊட்டிக்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணியர் சோதனை சாவடிகளில், இரண்டு
 ஊட்டி தாவரவியல் பூங்காவில்  சுற்றுலா பயணியருக்கு தடுப்பூசி

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணியர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால், அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டன.இரண்டாம் சீசன் நிலவி வருவதால், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. தினமும், 15 ஆயிரம் பேர் வரை ஊட்டிக்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணியர் சோதனை சாவடிகளில், இரண்டு தடுப்பு ஊசி செலுத்திய ஆதாரங்களை காட்டினால் போதும். மற்றவர்கள் மட்டும், 'நெகடிவ்' சான்றை காட்ட வேண்டும்.ஊட்டிக்கு வரும் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணியரால், தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில், மாவட்டத்தின் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில், தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், பல சுற்றுலா பயணியர் தாங்களாக வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.கேரளா சுற்றுலா பயணி ஜனார்த்தனன் என்பவர் கூறுகையில்,''சுற்றுலா மையங்களில் இந்த ஏற்பாடு செய்ததால், பலருக்கும் பயன் ஏற்பட்டுள்ளது. கேரளாவில், கூட்டம் அதிகம் காரணமாக எங்கள் குழுவில் பலர் தடுப்பூசி போடவில்லை. இங்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X