பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் மோசடி

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோவை : ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.65 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.சூலுார், காங்கையம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜன்,78; ஓய்வு பெற்ற விமானப்படை அலுவலர். கடந்த, 30ல் இவரது மொபைல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், வங்கி கணக்கில் கே.ஒய்.சி., பதிவு செய்யப்படாமல் உள்ளது. மெசேஜில் உள்ள லிங்கை கிளிக் செய்து கே.ஒய்.சி.,யை

கோவை : ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.65 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சூலுார், காங்கையம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜன்,78; ஓய்வு பெற்ற விமானப்படை அலுவலர். கடந்த, 30ல் இவரது மொபைல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், வங்கி கணக்கில் கே.ஒய்.சி., பதிவு செய்யப்படாமல் உள்ளது. மெசேஜில் உள்ள லிங்கை கிளிக் செய்து கே.ஒய்.சி.,யை புதுப்பிக்கவும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.ராஜன், தனது வங்கி ரகசிய எண், ஓ.டி.பி., ஆகியவற்றை பதிவு செய்தார். சற்று நேரத்தில், அவரது வங்கிக்கணக்கில் இருந்து, ரூ.65 ஆயிரம் மாயமானது. அதிர்ச்சி அடைந்த ராஜன், கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.'வங்கி கணக்கு எண் குறித்து வரும் போலியான குறுந்தகவல்களை நம்பி ஏமாறாதீர்கள்' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X