பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் உண்ணாவிரதம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை அருகே, வீடு கட்ட இடம் வழங்கக்கோரி, பழங்குடியின மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லார் குடி செட்டில்மெண்ட் உள்ளது. கடந்த, 2018ல் பெய்த கனமழையில் வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகளை இழந்த பழங்குடி மக்கள், தற்காலிகமாக தாய்முடி டீ எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வன உரிமை சட்டப்படி,
 பழங்குடியினர்  உண்ணாவிரதம்

வால்பாறை : வால்பாறை அருகே, வீடு கட்ட இடம் வழங்கக்கோரி, பழங்குடியின மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லார் குடி செட்டில்மெண்ட் உள்ளது. கடந்த, 2018ல் பெய்த கனமழையில் வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகளை இழந்த பழங்குடி மக்கள், தற்காலிகமாக தாய்முடி டீ எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வன உரிமை சட்டப்படி, மாற்று இடமான தாய்முடி தெப்பக்குளம் மேட்டுப்பகுதியில் வீடு கட்ட இடம் வழங்கக்கோரி, கல்லார் குடி பழங்குடியின மக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி சப்-கலெக்டர் சுபம் ஞானதேவ், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் சமரச பேச்சு நடத்தினர். மாலை வரை முடிவு எட்டப்படாத நிலையில், பழங்குடியின மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X