பொது செய்தி

தமிழ்நாடு

சூரியசக்தி, மாற்று எரிசக்தி ஆதாரங்களால் தெற்கு ரயில்வேக்கு ரூ.377 கோடி மிச்சம்!

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை- சூரிய மின் சக்தி நிலையங்களாலும், பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களாலும், தெற்கு ரயில்வேக்கு 377 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது.சூரிய மின் சக்தி உள்ளிட்ட, பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, பசுமை சூழ்நிலையை பாதுகாக்க, இந்திய ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. பூஜ்ய இலக்குவரும் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில் பூஜ்ய இலக்கை அடைய

சென்னை- சூரிய மின் சக்தி நிலையங்களாலும், பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களாலும், தெற்கு ரயில்வேக்கு 377 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது.



latest tamil news


சூரிய மின் சக்தி உள்ளிட்ட, பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, பசுமை சூழ்நிலையை பாதுகாக்க, இந்திய ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. பூஜ்ய இலக்குவரும் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில் பூஜ்ய இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தெற்கு ரயில்வேயில் சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. மின் சிக்கனம் மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கில், சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்தியதால், 2020 - 21ல், தெற்கு ரயில்வேக்கு 377 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது. டீசல் செலவுபசுமை ரயில் நிலையத்துக்கு, இந்திய பசுமை கட்டட கவுன்சிலால் வழங்கப்படும், 'பிளாட்டினம்' சான்று, கோவை ரயில் நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news


சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, பசுமை ரயில் நிலைய விருது, பசுமை கட்டட ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு, ஆற்றல் சேமிப்பு சான்றிதழ்; சென்னை தண்டையார்பேட்டை, ராயபுரம், அரக்கோணம், ஈரோடு மற்றும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள, டீசல் லோகோ பணிமனைகளுக்கு, 'ஐ.எஸ்.ஓ., 50001' தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் இன்ஜின் இயக்கம் 568 ஆக உயர்ந்துள்ளது. டீசல் இன்ஜின்கள் 340ல் இருந்து 120 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில் டீசல் செலவு 371 கோடி ரூபாயாக குறையும்.இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
03-அக்-202112:03:53 IST Report Abuse
pradeesh parthasarathy இவ்வளவு லாபம் ரயில்வே க்கு கிடைச்சிதுன்னா அப்புறம் எதற்கு தனியாருக்கு கொடுக்கிறீங்க ...
Rate this:
Cancel
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
03-அக்-202108:27:47 IST Report Abuse
Vijayan Singapore நல்ல முன்னேற்றம், மற்ற நாடுகளைபோல் வாயிலேபேசிக்கொண்டு இருக்காமல் செயலில் காட்டுவது மிகச்சிறப்பானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X