பொது செய்தி

தமிழ்நாடு

பெயர் பலகை சேதம் ஐ.ஜி.,யிடம் புகார்

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோவை : பகுஜன் சமாஜ் ஆட்டோ ஓட்டுனர் சங்க பெயர் பலகையை சேதப்படுத்தியோர் மீதும், நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை கோரி, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.அதில், 'ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில், 10 ஆண்டுகளாக, 17 பேர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறோம். பகுஜன் சமாஜ் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம்

கோவை : பகுஜன் சமாஜ் ஆட்டோ ஓட்டுனர் சங்க பெயர் பலகையை சேதப்படுத்தியோர் மீதும், நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை கோரி, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

அதில், 'ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில், 10 ஆண்டுகளாக, 17 பேர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறோம். பகுஜன் சமாஜ் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம் என்ற பெயரில், பதிவு பெற்ற சங்கம் நடத்தி வருகிறோம்.'கடந்த, 28ம் தேதி இரவு, பெயர் பலகையை சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.

மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபாவிடம் புகார் தெரிவித்தபோது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயர் பலகையை சேதப்படுத்திய மாதேஸ்வரன், பொன்னுசாமி, ரவி ஆகியோர் மீதும், வழக்கு பதியாத இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X